திங்கள், 21 செப்டம்பர், 2026

நாட்டில் திருமலை சித்திரவதை கூடத்தில் தமிழ் யுவதிகளும் கொலை

.நாட்டில் திருகோணமலை கடற்படைத் தளத்தின் இரகசிய சித்திரவதை முகாமெனக் கூறப்படும் 'கன்சைட்' முகாமில் தமிழ் பெண்களும் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
திருகோணமலையின் பாலையூற்றுப் பிரதேசத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட இரு பெண்களின் கொலை தொடர்பில், நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் கைது செய்யப்பட்டு,   திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் 
திங்கட்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் கடற்படை பெண் சிப்பாய்கள்; இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவ்விருவருக்கான அடையாள அணிவகுப்பை ஒக்டோபர் 5ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் கடற்படை சிப்பாய்களான சந்தமாலி மற்றும் 'காவோஸ்' என அழைக்கப்படும் இருவரும், நீதிவான் நீதிமன்ற நீதிபதி; முன்பு   முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
2008ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி திருகோணமலை, பாலையூற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த தேன்மொழி சசிகுமார் மற்றும் மேரி டெலிசியா ஆகிய இரு பெண்களும் வெள்ளை வானில் வந்த கடற்படையினரால் கடத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் 'கன்சைட்' முகாமில் தடுத்து வைக்கப்பட்டதுடன், அதன்பின்னர் இரு பெண்களும் படுகொலை
 செய்யப்பட்டனர்.
அக்கொலைகளை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் கடற்படை பெண் சிப்பாய்ககள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை(20) கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்  திருகோணமலைக்கு திங்கட்கிழமை (21) அழைத்து வரப்பட்டிருந்தனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.