சனி, 31 ஜனவரி, 2026

யாழ் மாவிட்டபுரத்தில்இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த பெருந்தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அவர்களின் திருவுருவச் சிலை முக்கிய நிகழ்வாக.31-01-2026 திகதி 
சனிக்கிழமை இன்று  
  காலை அவர் பிறந்த யாழ் மாவிட்டபுரத்தில் மாவை சேனாதிராசா நினைவாகப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உருவச் சிலை திறந்துவைக்கப்பட்டது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html






 

நாட்டில் திருகோணமலைக்கும் - முல்லைத்தீவிற்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் நிலநடுக்கம் பதிவு

நாட்டில் திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையிலான கடலில் இன்று (31) பிற்பகல் ஒரு சிறிய நிலநடுக்கம்
 ஏற்பட்டுள்ளது.
 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. 
 இன்று பிற்பகல் 3.49 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அருகிலுள்ள நிலத்தில் இருந்தவர்களும் இதை உணர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

- கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்விற்கு மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

நாட்டில்  கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வெளிகண்ட்டல் ஆற்றுப்பகுதி 
மற்றும் வயல்ப் பகுதிகளில்  சட்டவிரோத மணல் அகழ்வு 
இடம்பெற்று வருகிறது.
 டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால்  கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆற்றுப் படுக்கை மற்றும் வயல் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் மணல்களை சட்டவிரோதமான முறையில் அகழும் நடவடிக்கையில் சில தரப்பினர் ஈடுபட்டு
 வருகின்றனர். 
இவ்வாறு அகழப்படும் மணல்கள் இரவு வேளைகளில் உழவு இயந்திரத்தின் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் டிப்பர் வாகனம் மூலம்  எந்தவித அனுமதியும் இன்றி பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எனவே குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 30 ஜனவரி, 2026

.மீண்டும் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்

மீண்டும் 14 வருட இடைவெளிக்குப் பிறகு வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நேரடி விமான சேவைகள்  
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
டாக்காவிலிருந்து கராச்சிக்கு(Karachi) புறப்படும் முதல் விமானம் BG-341 மூலம் நேரடி சேவை மீண்டும் தொடங்கப்பட்டதாக பிமான் வங்கதேச ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. 
2012ம் ஆண்டில் அப்போதைய ஷேக் ஹசீனாநிர்வாகத்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

தற்போது இலங்கையின் ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு

தற்போது இலங்கையின் ஆடை மற்றும் தைக்கப்பட்ட ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதியானது 2024 டிசம்பரில் காணப்பட்ட 424.18 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், 2025 டிசம்பரில் 5.43% இனால் அதிகரித்து 447.21 மில்லியன் அமெரிக்க டொலர்களாக
 உயர்ந்துள்ளது. 
மூன்று பிரதான இலக்குச் சந்தைகளிலும் வளர்ச்சி பதிவாகியுள்ளது. 
அமெரிக்காவுக்கான ஏற்றுமதி, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 6.49% அதிகரித்து 178.29 மில்லியன் அமெரிக்க டொலர்களாக
 உயர்ந்துள்ளது. 
அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான (பிரித்தானியா தவிர்ந்த) ஏற்றுமதி 6.76% வளர்ச்சியடைந்து 141.00 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (132.07 மில்லியன் டொலர்களிலிருந்து)
 அதிகரித்துள்ளது.
பிரித்தானியாவுக்கான ஏற்றுமதி 12.95% அதிகரித்து 55.12 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (48.80 மில்லியன் டொலர்களிலிருந்து) 
உயர்ந்துள்ளது.
ஏனைய சந்தைகளுக்கான ஏற்றுமதி 4.06% வீழ்ச்சியடைந்து 72.80 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (75.88 மில்லியன் டொலர்களிலிருந்து)
 குறைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, டிசம்பர் மாத ஏற்றுமதியானது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட 23.03 மில்லியன் அமெரிக்க டொலர்கள் 
அதிகமாகும்.
2025 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில், மொத்த ஏற்றுமதியானது 2024 ஆம் ஆண்டின் 4,761.02 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், 5.42% அதிகரித்து 5,019.20 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 258.18 மில்லியன் அமெரிக்க டொலர் வருடாந்த வளர்ச்சியாகும்.
ஆடை ஏற்றுமதிக்கு மேலதிகமாக, ஜவுளி வகைகளின் ஏற்றுமதி ஆண்டுக்கு 526.33 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.
இதன் மூலம் இத்துறையின் மொத்த ஏற்றுமதி பெறுமதி அந்த ஆண்டில் 5,505 மில்லியன் அமெரிக்க டொலர்களாக 
உயர்ந்துள்ளது. 
சந்தை ரீதியாகப் பார்க்கையில், முழு ஆண்டுக்கான வலுவான வளர்ச்சி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (பிரித்தானியா தவிர்ந்த)
 கிடைத்துள்ளது.
இது 12.48% அதிகரித்து 1,576.39 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (1,401.50 மில்லியன் டொலர்களிலிருந்து) உயர்ந்துள்ளது.
அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 2.15% வளர்ச்சியடைந்து 1,947.37 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (1,906.39 மில்லியன் டொலர்களிலிருந்து) அதிகரித்துள்ளது.
அதேவேளை, பிரித்தானியாவுக்கான ஏற்றுமதி பெரிய மாற்றமின்றி சீராகக் காணப்பட்டதுடன், அது 0.74% உயர்ந்து 679.66 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (674.70 மில்லியன் டொலர்களிலிருந்து)
 பதிவாகியுள்ளது. 
ஏனைய சந்தைகளுக்கான ஏற்றுமதி 4.80% அதிகரித்து 815.78 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (778.43 மில்லியன் டொலர்களிலிருந்து) உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், டிசம்பர் மாத 
ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன சுமார் 71% பங்கினைக் கொண்டிருந்தன.
அத்துடன், அந்த மாதத்தின் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கினையும் இவையே வழங்கியுள்ளன.
இந்தச் செயல்திறன் குறித்து, ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) கருத்து தெரிவிக்கையில், “ஆண்டு இறுதியில் ஏற்றுமதி வருமானம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளமையானது, எமது பிரதான சந்தைகளில் இத்துறை கொண்டுள்ள ஸ்திரத்தன்மையை
 வெளிப்படுத்துகிறது. 
இதில் ஐரோப்பிய ஒன்றியம் ஆண்டு முழுவதும் மிக வலுவான உத்வேகத்தை வழங்கியுள்ளது. டிசம்பர் மாதத்தில் பிரித்தானியாவில் காணப்பட்ட உயர்வு மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் தொடரும் வளர்ச்சி ஆகியன ஊக்கமளிக்கின்றன.
அதேவேளை, டிசம்பர் மாதத்தில் ஏனைய சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவானது, எமது கேள்வித் தேவையை (Demand) பன்முகப்படுத்துவதும், 
பாரம்பரியமற்ற சந்தைகளை வலுப்படுத்துவதும் ஒரு முன்னுரிமைப் பணியாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகின்றது.”
 என தெரிவித்தது.
“இந்த எண்கள் வரவிருக்கும் மாதங்களுக்கான செயல்திட்டத்தை வகுத்துள்ளன. வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள, 
போட்டித்தன்மையை மேம்படுத்துதல், விநியோக நம்பகத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் சீரான தரம் மற்றும் பொறுப்பான உற்பத்தியின் ஊடாக
 கொள்வனவாளர்களின் நம்பிக்கையை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் இத்துறை தொடர்ந்து கவனம் செலுத்தும் என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, 30-01-2026,இன்று.பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, 24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 20,000 ரூபாய் குறைந்துள்ளது. 
அதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. 
இதேவேளை, இந்திய சந்தையிலும் தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கம் பவுணுக்கு (இந்திய மதிப்பில்) ரூ. 4,800 குறைந்து, ஒரு பவுண் ரூ. 129,600 க்கும், ஒரு கிராம் ரூ. 16,200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



 

வியாழன், 29 ஜனவரி, 2026

எட்டு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வாகனங்களை திருடிய நபர் கைது

வாகன திருட்டு தொடர்பாக தேடப்பட்டுவந்த சந்தேக நபர் ஒருவர் கெஸ்பேவ பகுதியில் வைத்து உரகஸ்மன்ஹந்திய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கார் திருடப்பட்டமை தொடர்பில், கடந்த 2025.10.21ஆம் திகதியன்று உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதற்கமைய, திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் உரகஸ்மன்ஹந்திய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் உரகஸ்மன்ஹந்திய, யட்டகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் எல்பிட்டிய மற்றும் பத்தேகம பொலிஸ் பிரிவுகளில் 02 முச்சக்கர வண்டிகளைத் திருடியதுடன், ஹோமகம பகுதியில் 02 மோட்டார் சைக்கிள்களைத் திருடியுள்ளமை விசாரணைகளின் போது 
தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் நேற்று (28) எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், 7 நாள் பொலிஸ் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

கனடா ஒன்டாரியோவில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில், டொராண்டோ நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் சுமார் 50 வாகனங்கள் தொடர்புடைய தொடர் விபத்துகள் ஏற்பட்டதாக ஒன்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்துகளில் உயிருக்கு ஆபத்தன அல்லது கடுமையான காயங்கள் ஏற்பட்டதாக எந்த அறிகுறியும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், சிலர் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்துகள் காரணமாக சாலையில் சிக்கித் தவித்த ஓட்டுநர்களுக்காக அவசர மாற்றுப் பாதைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

நாட்டில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி - வேளாண் காப்பீட்டு மாதம் அறிவிப்பு

நாட்டில் வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகம் பிப்ரவரி 2026 முதல் விவசாயிகளுக்கு வேளாண் காப்பீட்டு மாதத்தை அறிவித்துள்ளது. 
இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகள் அரிசி, பீன்ஸ், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சோயாபீன்ஸ் மற்றும் மிளகாய் உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். 
காப்பீட்டுத் திட்டம் மழை, வெள்ளம், காட்டு யானைகள், பூச்சித் தாக்குதல், தீ, நோய்கள் மற்றும் பிற இயற்கை ஆபத்துகளால் ஏற்படும் சேதங்களை ஈடுகட்டும். 
 சிறிய பிரீமியத்திற்குக் கிடைக்கும் காப்பீட்டுத் திட்டங்கள், இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் பயிர் இழப்புகளையும் ஈடுகட்டும், விவசாயிகளுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கும் என்று அமைச்சகம் 
அறிவித்துள்ளது.
 காபி, வெண்டைக்காய், இஞ்சி, மிளகாய், முந்திரி, எள் மற்றும் சோளம் போன்ற பயிர்களுக்கு, காப்பீட்டு பிரீமியமானது காப்பீட்டுத் தொகையில் 7% ஆகும்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

புதன், 28 ஜனவரி, 2026

நாட்டில் மட்டக்களப்பில் அதிசயம் : ஒரே பிரசவத்தில் பிறந்த 5 ஆண் குழந்தைகள்

நாட்டில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் தாயொருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து ஆண் குழந்தைகளை பிரசவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 
மட்டக்களப்பு, கிரான் குளத்தைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் பிரசவத்திற்காக மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 
கடந்த.26-01-2026. திங்கட்கிழமை அன்று  அவருக்கு பிரசவம் நடைபெற்றது. இதன்போது அந்தத் தாய் ஐந்து ஆண் குழந்தைகளை
 பெற்றெடுத்துள்ளார். தற்போது தாயும், ஐந்து குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

செவ்வாய், 27 ஜனவரி, 2026

ஜெனீவாவில் இருக்கும் இலங்கை தூதரகத்தின் கவனத்திற்கு

தற்போது சுவிட்சர்லாந்தில் வசிக்கும் புலம் பெயர் இலங்கை தமிழர்கள், தங்களின் பிறப்பத்தாட்சி பத்திரம் மற்றும் கடவுச்சீட்டுக்களை புதுப்பிப்பதில் காலதாமதத்தை எதிர்கொள்வதாக 
தெரியவந்துள்ளது. 
அங்கு வாழும் இலங்கை பிரஜைகள் ஜெனீவாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் மேற்படி இரு பத்திரங்களையும் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளனர். 
இருப்பினும் இலங்கையில் உள்ள தூதரகத்தில் அவர்களின் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அல்லது தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இது தொடர்பில் கேள்வி எழுப்பும்போது தொலைபேசி இலக்கம் ஒன்று தரப்படுவதாகவும், இருப்பினும் அந்த இலக்கத்தினால் 
எவ்வித பயனும் இல்லை என்றும் மக்கள் விசனம் 
வெளியிட்டுள்ளனர். 
இதன் காரணமாக பலர் வேறு இடங்களுக்கு செல்ல முடியாமலும், தங்களின் அலுவல்களை செய்ய முடியாமலும் தவிப்பதாக  முறைப்பாடு அளித்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




நாட்டில் நிரந்தர வேலைவாய்ப்பு கோரி ஜனாதிபதி செயலத்திற்கு முன் உணவு தவிர்ப்பு போராட்டம்

நாட்டில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அபிவிருத்தி அதிகாரிகள் குழுவினால் நிரந்தர வேலைவாய்ப்பு கோரி உண்ணாவிர போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
இதில் சுகவீனமுற்ற நபர் ஒருவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் சுகவீனமடைந்ததையடுத்து 1990 ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக எமது செய்தியாளர்
 தெரிவித்தார். 
ஏழு ஆண்டுகளாக பாடசாலைகளில் பணியாற்றி வருவதால், தங்களை ஆசிரியர் சேவையில் சேர்க்குமாறு கோரி 04 பேர் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமைஎன்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்களிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை செலுத்த கொடுக்கும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து 
கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவில் 26-01-2026.அன்று  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை
 தெரிவித்துள்ளார்.
நாட்டில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வீதி விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




திங்கள், 26 ஜனவரி, 2026

நாட்டில் ..30 சதவீதமான முதியவர்களுக்கு மனநலப் பிரச்சினை - வைத்தியர் மதுஷானி டயஸ்

 நாட்டில்  முதியோர் மக்களில் சுமார் 30% பேருக்கு மனநலப் பிரச்சினைகள் இருப்பதாக வயது வந்தோர் உளவியல் நிபுணர் டாக்டர் மதுஷானி டயஸ் கூறுகிறார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையின் முதியோர் மக்கள் தொகை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதன்படி, முதியோர் எதிர்கொள்ளும் மனநலப் பிரச்சினைகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு இல்லாததால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. 
சில நேரங்களில், வயதான காலத்தில் ஏற்படும் சில மனநல அறிகுறிகள் குறித்த கட்டுக்கதைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கவும், அவற்றை சாதாரணமாகக் காட்டவும் சமூகம்
 ஆசைப்படுகிறது. 
மறதி மற்றும் மனச்சோர்வு போன்ற அறிகுறிகளைப் புறக்கணிக்க பெரியவர்கள் ஆசைப்படுகிறார்கள். முதியோர்களிடையே மனநலப் பிரச்சினைகள் பரவுவது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை பாதித்துள்ளது. 
இதன் விளைவாக, உடல் சிக்கல்கள் அதிகரித்துள்ளன. 1999 ஆம் ஆண்டு மனநல மருத்துவமனையில் முதியோருக்கான சிறப்புப் பிரிவு நிறுவப்பட்டது, தற்போது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு
 இரண்டு குடியிருப்பு 
வார்டுகள் உள்ளன, மேலும் தீகாயு என்ற பகல்நேர சிகிச்சை மையம் சமீபத்தில் உளவியல் சிகிச்சை மற்றும் நடத்தை முறைகள் மூலம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கத் தொடங்கியுள்ளது” என்று அவர் கூறினார்..  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

நாட்டில் . நோயாளர்கள் பாதிக்கப்பட்டால் அமைச்சரே பொறுப்பு

 நாட்டில் .தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நோயாளர் பராமரிப்பு சேவைகள் பாதிக்கப்படுமாயின் அதற்கு முழுமையாக சுகாதார அமைச்சும், சுகாதார அமைச்சருமே பொறுப்புக் கூற வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு அவர் கருத்து வெளியிடுகையில், சுகாதார அமைச்சருடன் முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது தமது முன்மொழிவுகளுக்கு அவர் எழுத்துமூலம் இணக்கம் தெரிவித்ததாகவும், எனினும் வாக்குறுதியளித்தவாறு அதனை
 நடைமுறைப்படுத்த தவறியமையினால் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நோயாளர் பராமரிப்பு சேவைகள் பாதிக்கப்படுமாயின் அதற்கு முழுமையாக சுகாதார அமைச்சும், சுகாதார அமைச்சருமே பொறுப்புக் கூற வேண்டும் என 
அவர் சுட்டிக்காட்டினார்.
அவர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றியிருந்தால் தமக்கு இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டிய எவ்வித அவசியமும் ஏற்பட்டிருக்காது. வைத்தியத் தொழிலை 
விசேட சேவைப் பிரிவாகக் கருதி நிபுணத்துவ வைத்தியர்கள், தர வைத்தியர்கள் மற்றும் நிர்வாகத் துறையிலுள்ள வைத்தியர்களை
 இனங்கண்டு 
அவர்களுக்கு விசேட சம்பளக் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சர் வாக்குறுதியளித்ததாகவும், அது பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிடப்பட்டு ஹன்சார்டில் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், இதுவரை அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
டெட் கொடுப்பனவை இற்றைப்படுத்தல், மேலதிக கடமைக் கொடுப்பனவை நிரந்தரக் கொடுப்பனவாக மாற்றி அதனை சம்பளத்துடன் சேர்த்தல் உள்ளிட்ட முன்மொழிவுகள் தொடர்பில் ஜனவரி 5 ஆம் திகதிக்கு 
முன்னர் திறைசேரி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், அதற்கும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என வைத்தியர் பிரபாத் 
சுகததாச தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் ஊடாக அவசர நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது எனவும், தமது சங்கம் நோயாளர்களின் உயிரை ஆபத்தில் வீழ்த்தாது எனவும் வைத்தியர் மேலும் தெரிவித்தார்.  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

ஸ்பெயினுக்கு போலி விசாவில் பயணித்த பங்களாதேஷ் பிரஜை கட்டுநாயக்காவில் கைது

ஸ்பெயினுக்கு போலி விசாவைப் பயன்படுத்தி  செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 
இன்று (26) காலை BIA இல் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள்
 தெரிவித்துள்ளனர். 
சந்தேக நபர் தனது புறப்பாட்டிற்குத் தேவையான ஆவணங்களை கத்தார் ஏர்வேஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தார். ஆவணங்களின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்கள் காரணமாக, அவை மேலதிக பரிசோதனைக்காக விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவிடம்
 ஒப்படைக்கப்பட்டன. 
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகளில், சந்தேக நபர் வழங்கிய ஸ்பானிஷ் விசா போலியானது என்பது
 உறுதி செய்யப்பட்டது. 
 27 வயதான பங்களாதேஷ் நாட்டவர் ஐரோப்பிய நாடுகளுக்கான அதிகாரப்பூர்வ விசா வழங்கும் நிறுவனத்திற்கு  25,000 பங்களாதேஷ் டாக்கா (தோராயமாக ரூ. 63,000) தொகையை செலுத்தி போலி விசாவைப் பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

ஞாயிறு, 25 ஜனவரி, 2026

கொட்டி தீர்க்கும் பனியால் அமெரிக்காவில்: 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

 ஏற்பட்டுள்ள பனிப்புயல் காரணமாக  அமெரிக்காவில்  200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என 
எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 
அதேநேரம்  விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாகவும்
 கூறப்படுகிறது.  
தற்போதைய சூழ்நிலை காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டின் 21 மாநிலங்களுக்கு அவசரகால நிலையை அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

நாட்டில் .காலவரையற்ற தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கும் மருத்துவர்கள்

நாட்டில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA).26-01-2'26. நாளை  முதல் நாடளாவிய ரீதியாக காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளது.
 சுகாதார அமைச்சால் ஒப்புக்கொள்ளப்பட்ட தீர்வுகள் செயல்படுத்தப்படாத நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக
 அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி, நாளை காலை 8:00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் தொழிற்சங்கப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமை  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

ஏர் பிரான்ஸ் துபாய் நாட்டுக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தது

 ஏர் பிரான்ஸ் மத்திய கிழக்கின் அரசியல் சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது துபாய் சேவையை  மீண்டும் தொடங்கியுள்ளது என்று விமான நிறுவனம் 
தெரிவித்துள்ளது.
உயர்ந்த அளவிலான விமானப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சில இடங்களுக்கான விமானங்களை முடக்குவதாகவும், பிராந்தியத்தில் மேம்பாடுகளைக் கண்காணித்து வருவதாகவும்" பிரெஞ்சு விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர் பிரான்ஸைப் போலவே அதே குழுவைச் சேர்ந்த டச்சு விமான நிறுவனமான கே.எல்.எம், மத்திய கிழக்கில் உள்ள நகரங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விமானங்களை நிறுத்தியுள்ளது.
தெல் அவிவ், துபாய் மற்றும் ரியாத் ஆகிய நாடுகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விமானங்களை நிறுத்தி வைத்துள்ளதாகவும், ஈராக், ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடாவின் பல நாடுகளின் வான்வெளி வழியாக பறக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

சனி, 24 ஜனவரி, 2026

நாட்டில் அனுராதபுரத்தில், வீடு கட்ட 50 இலட்சம் தர முடிந்தால், ஏன் மலையக மக்களுக்கு தரமுடியவில்லை - மனோ கணேசன் கேள்வி

நாட்டில் அனுராதபுரத்தில், வீடு கட்ட 50 இலட்சம் தர முடிந்தால், ஏன் மலையக மக்களுக்கு அதே 50 இலட்சத்தில் காணி தந்து, வீடு கட்டி தர முடியாது? காணியை தோட்டங்களில் தான் பிரித்து, எடுத்து 
கொடுக்க வேண்டும்.
 தோட்ட நிர்வாகம் இதை செய்யாது. அரசாங்கம் தான் தோட்ட நிலங்களுக்கு சொந்தகாரர். ஆகவே,
 அரசாங்கம் இதை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  அனுரவை, பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்து, "நமது மக்களுக்கு காணி கொடுங்கள்" என நான் கேட்டேன். அனுர, "காணி எங்கே இருக்கிறது?" 
என என்னிடம் கேட்டார். நான் "காணி தோட்டங்களில் தான் இருக்கிறது" என அவருக்கு கூறினேன். ஆனால், நான் அன்று அதிர்ந்து போனேன். 
ஏனெனில், இதே சபையில், கடந்த காலத்தில், எதிர் கட்சியிலிருந்து, மலையக மக்கள் தொடர்பாக நான் கொண்டு வந்த முழுநாள் பிரேரணை விவாதங்களில், எமது காணி உரிமை தொடர்பில் அனுர
 உரையாடி உள்ளார். 
 தித்வா பேரழிவுக்கு பின்னரான, மீள்கட்டெழுப்பல் ஸ்ரீலங்கா, வீடமைப்பு செயற்பாட்டில், மண்சரிவால், அதிகமாக பாதிக்க பட்ட கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை, கேகாலை, மாவட்ட பெருந்தோட்ட மக்களுக்கு, ஏன் பாரபட்சம் காட்ட படுகிறது? 
 வீடு சுத்த படுத்தும் கொடுப்பனவு, பாடசாலை பிள்ளைகளுக்கான கொடுப்பனவு, மற்றும் அழிந்து போன காய்கறி, கால்நடை, சிறு கடை, துறைகள் சார்ந்த மக்களுக்கான கொடுப்பனவு, எல்லாவற்றிலும், மலையக மக்களுக்கு பாரபட்சம் காட்ட பட்டுள்ளது என்பதை மிக 
பொறுப்புடன் கூறுகிறேன். 
 ஜனாதிபதி அனுரகுமார இங்கே சபைக்கு வந்து அழகாக, அலங்காரமாக, பேசுகிறார். ஆனால், ஜனாதிபதியின் உறுதி மொழிகள், எமக்கு நிவாரணமாக, காணியாக, வீடாக, பிரதேச செயலாளர், கிராம சேவகர், NBRO அதிகாரிகள், தோட்ட முகாமையாளர்கள், ஊடாக கிடைப்பதில்லையே? இவர்கள் இடம் பெயர்ந்த எமது 
மக்களை, அவர்களின் பழைய இருப்பிடங்களுக்கு விரட்டுகின்றனர். ஆனால், பழைய வீடுகளின் சுவர்கள் இடிந்து போயுள்ளன. 
குடியிருப்புகளுக்கு மேலே மலை மேடுகள் நிற்கின்றன. குன்றுகள் இருக்கின்றன. அடுத்த பெரும் மழையில், அவை கீழே வரலாம் என எமது மக்கள் அஞ்சுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் வவுனியாவில் போக்குவரத்து பொலிஸார்களை மோதிய லொறி சாரதி கைது

நாட்டில் வவுனியா - களுக்குன்னமடுவ பகுதியில்.24-01-2026- இன்று காலை, மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டு தப்பிச் சென்ற லொறி சாரதி ஒருவர் கைது
 செய்யப்பட்டுள்ளார்..
கட்டளையை மீறி பயணித்த சிறிய லொறி ஒன்றை பொலிஸ் அதிகாரிகள் இருவரும் பின்தொடர்ந்து சென்றபோதே, லொறி சாரதி பொலிஸ் அதிகாரிகளை விபத்துக்குள்ளாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக
 பொலிஸார் தெரிவித்தனர். 
மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாக்கிய போது பொலிஸ் அதிகாரிகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு வீதியின் ஒரு ஓரத்தில்
 விழுந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் லொறியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட காட்சியும் பின்னால் வந்த வாகனத்தில் இருந்த ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியிருந்தது. 
விபத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸார் தற்போது வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூஓய பாலத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாம் திசையில்
 சந்தேகநபர் தப்பிச் சென்றுகொண்டிருந்த போது, இராணுவத்தினர் அவரைக் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் லொறியும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தைப் பற்றி ஈரட்டைபெரியகுளம் போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வெள்ளி, 23 ஜனவரி, 2026

யாழ் மாவிட்டபுரத்தில் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு உருவச்சிலை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வும், உருவச் சிலைத் திறப்பு விழாவும் எதிர்வரும் 31ம் திகதி சனிக்கிழமை விழாக் குழுவின் ஏற்பாட்டில் யாழில் 
இடம்பெறவுள்ளது.
முக்கிய நிகழ்வாக அன்றைய தினம் காலை அவர் பிறந்த யாழ் மாவிட்டபுரத்தில் மாவை சேனாதிராசா நினைவாகப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.
.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புகலிடக் கோரிக்கையாளர்களை பிரித்தானியாவில் இராணுவ முகாம்களுக்கு மாற்றும் நடவடிக்கை

 புகலிடக் கோரிக்கையாளர்களை பிரித்தானியாவில்  இராணுவ முகாம்களுக்கு மாற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி 27 புகலிடக் கோரிக்கையாளர்கள் கிழக்கு சசெக்ஸில் உள்ள இராணுவ முகாமிற்கு மாற்றப்பட்டதாக 
அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அலுவலகம் 500க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் வரை மூன்று மாதங்களுக்கு முகாம்களில் தங்க வைக்க திட்டமிட்டுள்ளது.
.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.htm




 

வியாழன், 22 ஜனவரி, 2026

பிரித்தானிய தூதுவர். யாழ். 'அம்மாச்சி' உணவகத்தில் குண்டு தோசை சாப்பிட்டார்

யாழ்ப்பாணத்தில் பெண்கள் நடத்தும் 'அம்மாச்சி' உணவகத்திற்கு இலங்கைக்கான பிரித்தானியாவின் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்
டித்வா சூறாவளிக்குப் பின் வட மாகாணத்திற்கு அவர் நேற்றுமுன்தினம் விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போதே பெண்கள் நடத்தும் 'அம்மாச்சி' உணவகத்தில் பாரம்பரிய யாழ்ப்பாண காலை உணவோடு அவர் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். 
இதன்போது தோசையும் சம்பலும் உண்ணும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தப் பயணத்தின்போது தொண்டமானாறு செல்வ சந்நிதி கோவிலுக்கும் எளிமையாக 
விஜயம் செய்துள்ளார். 
இதேவேளை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் (Andrew Patrick), யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றையதினம் காலை அரச அதிபர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார் 
இதன் போது கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர், டித்வா புயல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிதியினை 
அரசாங்கத்திற்கு வழங்கி செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தி 
வருவதாகவும் , டித்வா புயலுக்குப் பின்னரான அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவதானித்தவகையில் சிறப்பான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் 
தெரிவித்தார். 
பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என தாம் நம்புவதாகவும் தெரிவித்து, மாவட்டத்தின் தற்போதைய சமூக பொருளாதார
 முன்னேற்ற நிலைமைகள், காங்கேசன்துறை முதலீட்டு வலயம், முதலீட்டு வாய்ப்புக்கள் போன்ற விடயங்களை அரச அதிபரிடம் கேட்டறிந்து கொண்டனர்
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.