சனி, 27 பிப்ரவரி, 2021

தெஹிவளையில் ஒரு தொகை ஹெரோயின் 1.5 மில்லியன் ரூபா பணத்துடன் பெண் கைது

தெஹிவளையில் 1 கிலோ ஹெரோயின் மற்றும் 1.5 மில்லியன் பணத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ராகமையில் 750 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் கொட்டாஞ்சேனையில் 43 கிராம் ஐஸ் போதைப் பொருள், 4 கைபேசிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலாவரை.கொம் செய்திகள் >>>...

வியாழன், 25 பிப்ரவரி, 2021

நாட்டில் தப்பிச் சென்ற இராணுவ அதிகாரி ஹெரோயினுடன் கைது

 ஹெரோயினுடன்,25-02-2021,  இன்று காலை கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.ஹொரண பகுதியில் வைத்து 45 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இராணுவ அதிகாரி ஒருவரும் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒருவருமே...

சிறிலங்கா ஐ.நா. ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்தது

  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்சலட் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையை சிறிலங்கா  அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.அத்தோடு, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தமது மக்களின் வாழ்க்கை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நியாயமான நடவடிக்கைகளுடன், சர்வதேச அளவில்...

புதன், 24 பிப்ரவரி, 2021

நாட்டில் ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்படமாட்டார்கள் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்..23-02-2021.அன்று  மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது இவ்வாறானதொரு...

திங்கள், 22 பிப்ரவரி, 2021

விடுதலைப்புலிகளை தியாகிகளாக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை

பிரிட்டன் அரசியல்வாதி நேஸ்பி பிரபு ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை கடுமையாக சாடியுள்ளதுடன் அறிக்கையின் தொனி விடுதலைப்புலிகளிற்கு தியாகிகள் அந்தஸ்த்தை பெற்றுக்கொடுக்கும் விதத்தில் விதத்தில் காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையில் நல்லிணக்கத்தை முன்னெடு;ப்பதற்கு உதவக்கூடிய விடயம்...

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

இம்முறை காணொளி ஊடாக ஜெனிவாச் சமர் நாளை ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை  22ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை காணொளி ஊடாகவே இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் ‍தொடர்பில் உலக நாடுகளின் மனித உரிமை நிலை குறித்து...

யாழில் தமிழ் மொழிக்கு விழா எடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2021ம் ஆண்டுக்கான உலக தாய்மொழித்தினம் ,21.02.2021,இன்றைய தினம். நாவலர் பொது மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக வாழ்நாள் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர்...

சனி, 20 பிப்ரவரி, 2021

கிளிநாச்சியில்கஜேந்திரகுமாரிடம் காவல் துறையினர் விசாரணை!!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துக்கொண்டமைத் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கிளிநொச்சி  காவல் துறை  இன்று (20) வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.கிளிநாச்சியில் உள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து காவல் துறை வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். நிலாவரை.கொம் செய்திகள்...

இலங்கை ஆதரவு வழங்க வேண்டும் எனக் கோட்டபாய கோரிக்கை

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில், இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சிறீலங்கா அரசு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.இந்த கூட்டத் தொடரில் சிறீலங்காவுக்கு எதிராக பிரிட்டன் தலைமையிலான சில நாடுகள் கூட்டாகப் புதிய பிரேரணை கொண்டு வரவுள்ளன.இந்த நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி கோட்டாபய...

திருச்செந்தூரன் மில் வீதி தொலைத் தொடர்புக் கோபுரத்தினால் பல்வேறு அபாயம்

வவுனியா உக்குளாங்குளம் திருச்செந்தூரன் மில் வீதியில் மக்கள் குடியிருப்பில் நிர்மானிக்கப்பட்டு வரும் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் நிர்மாணப்பணியை தடுத்து நிறுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரிவருகின்றனர்..இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில்:-உக்கிளாங்குளம் திருச்செந்தூரன் மில் வீதியில் மக்கள் குடியிருக்கும் பகுதியில்...

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

புதிதாக பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவர்களுக்கு

புதிதாக பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி..!! மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புபல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 500 இனால் அதிகரிக்கப்படவுள்ளது.இதற்காக பல்கலைக்கழக கட்டமைப்பில் புதிதாக 500 விரிவுரையாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.பல்கலைக்கழக...

விசாரணை யாழ். முதல்வர் மணிவண்ணனிடம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் ஆகியோரிடம்,19-02-2021. இன்று பிற்பகல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், மணிவண்ணனிடம் மன்னார் மற்றும் பருத்தித்துறை காவல் துறை  மாநகர சபை...

இலங்கை அரசாங்கம் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும்நிலை

அரசாங்கம் தனக்கு மேலும் மேலும் நெருக்கடியை உருவாக்கிக்கொள்கின்றது என தெரிவித்துள்ள  மாற்றுக் கொள்கைகள்  நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து சர்வதேசரீதியில் தனிமைப்படுத்தப்படும் நிலையை உருவாக்குகின்றது என குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கம் தனக்கு மேலும் மேலும் நெருக்கடியை உருவாக்கிக்ககொள்கின்றது சர்வதேசரீதியில்...

வியாழன், 18 பிப்ரவரி, 2021

வீட்டுத் திட்டத்துக்கான முழுமையான நிதியை வழங்கக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

 யாழில் வீட்டுத் திட்டத்துக்கான மீதிப் பணத்தை பெற்றுத்தருமாறு கோரி சண்டிலிப்பாய் பெரியவிளான் மக்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றிலில் 17-02-2021,அன்று ,புதன்கிழமை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெரிய விளான் 3 ஆம் வட்டாரம் ஜே 153 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள மக்களுக்கு ஏழு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா...

புதன், 17 பிப்ரவரி, 2021

நாட்டில் போராட்டம் வரலாறு காணாத வெற்றியைக் கண்டது

  நாட்டில் தற்போது ஒரு தேர்தல் நடந்தால் வடக்கு கிழக்கல் அரசோடு இருக்கின்ற எவரும் தெரிவு செய்யப்படக் கூடிய நிலைமை இருக்காது என்றே நினைக்கின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது...

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தடுப்பூசி போட மறுப்பு

  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு 16-02-2021, இன்றுமுன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தான் அதனை செலுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளார்.தனது டுவிட்டரில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.அதாவது, குறைந்தப்பட்சம் ஒரு மில்லியன் பொதுமக்களுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னரே,...

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

யாழ் காங்கேசன்துறை துறைமுகத்தில் நிற்கும் வடதாரகை

யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை பயணிகள் படகு, திருத்த வேலைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டு ஆறு மாதங்கள் கடந்தும்,  காங்கேசன்துறை துறைமுகத்திலேயே இன்னும்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி தெரிவித்தார். நெடுந்தீவு கடல் மார்க்கப் போக்குவரத்து சேவைகளில், வீதி...

தமிழின உணர்வாளர் கிருபா அவர்கள் பிரான்சில் மரணம் 13.02.21

ரான்சில் தமிழின உணர்வாளர் தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி (கிருபை நடராஜா) அவர்கள் தனது 70 ஆவது அகவையில்  13.02.2021,சனிக்கிழமை அன்று சுகயீனம் காரணமாக சாவடைந்துள்ளார்.இவர் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு மூதாளர் அவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் திருகோணமலை மற்றும் முத்தையன்கட்டு,வலதுகரை...

சிறிலங்கா வடக்கில் 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கியது ஏன்?

ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசு பெறுவதற்காகவே வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  வடக்கு மாகாணத்தில் ; மூன்று தீவுகள் சீன கம்பெனி ஒன்றுக்கு மின்சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு...

சனி, 13 பிப்ரவரி, 2021

பாரிய கடலட்டைப் பண்ணை இரணைதீவில் அங்குரார்ப்பணம்

நவீன தொழில்நுட்ப பதனிடுதல் பொறிமுறையை உள்ளடக்கிய பாரிய கடலட்டைப் பண்ணை இரணைதீவு பிரதேசத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கிளிநொச்சி, இரணைதீவு கடற் பிதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள குறித்த பண்ணைக்கான ஆரம்ப நிகழ்வுகள் நாளை(14) இரணைதீவில் இடம்பெறவுள்ளது.கடற்றொழில் அமைச்சரின் வேண்டுகோளுக்கு...

முதல் தடவையாக கால் மேசை பந்தாட்டம்(TeqBall)வடமாகாணத்தில்

சிறீலங்கா விளையாட்டுத்துறை அமைச்சினால் 72ஆவது விளையாட்டாக அறிமுகப்படுத்திய கால் மேசை பந்தாட்டம் (TeqBall) முதல் தடவையாக வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (13) காலை 9 மணிக்கு, வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டு அரங்கில் (futsal play ground) நடைபெற்றது.யாழ்ப்பாணம் மாவட்ட இணைப்பாளராக சிவா ஜீவிந்தனை, இலங்கை...

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

உடகோஹோவிலவில் சிறுமி கர்ப்பமான நிலையில் பேய் கலைப்பவரின் வீட்டிலிருந்து மீட்பு.

திருமலையில்  15 வயதுக்குட்பட்ட சிறுமியை கடத்தி குடும்பம் நடத்தி வந்த பேயோட்டுபவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கந்தளாயை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று ஹாலி எல, உடகோஹோவில பகுதியில் வசித்து வந்தபோதே ஆசாமி சிக்கினார். ஹாலிஎல பொலிசார் கைது செய்யப்பட்ட பேயோட்டுபவரின் வயது 38.பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பேயோட்டும் நபர், யக்கல மற்றும் கலகேதிஹேன...

ஒரு போதும் படையினரின் மோசமான செயல்களை மன்னிக்க முடியாது

நாட்டில் சீருடையிலிருந்த ஒரு இராணுவ உறுப்பினர் மற்றும் ஒரு குழுவினர் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரப்புவதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்தநிலையில் சம்பவம் குறித்து விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.ஒரு...
Blogger இயக்குவது.