சனி, 30 ஜனவரி, 2021

தையிட்டியில் தனியார் காணியில் புத்த விகாரை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது

யாழ்-தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைக்க இராணுவ தளபதி சவேந்திர சில்வாவினால் 30-01-2021.இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் புத்த விகாரை அமைக்க எதிர்ப்பு வெளியிடப்பட்டு, நிரந்தரக் கட்டடம் அமைக்க தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலேயேபுத்த விகாரை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. நிலாவரை.கொம்...

வெள்ளி, 29 ஜனவரி, 2021

மானிப்பாயில் முச்சக்கர வண்டியில் நடமாடும் விபச்சாரம். நால்வர் கைது.

யாழ்  மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இளம் பெண் ஒருவர் அடங்கலாக கலாசார சீரழிவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரை 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அத்துடன், 20 வயது இளம் பெண்ணை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை அறிக்கையைப் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவான்...

வியாழன், 28 ஜனவரி, 2021

மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு - கிழக்கில்

சிறீலங்காவின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக கடைப்பிடித்து கறுப்பு பட்டி அணிந்து மாபெரும் அடையாள உணவு தவிர்ப்பு மற்றும் கவனயீர்ப்பு போராட்டத்தை எதிர்வரும் 2ஆம் திகதி ஆரம்பித்து 6ஆம் திகதிவரை நடத்த போவதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் அறிவித்துள்ளது. நிலாவரை.கொம் செய்திகள் >>>...

இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

சிறீலங்காப் கடற்படையினரால் இந்திய - சிறீலங்கா கடல் எல்லையில் உயிரிழந்த நான்கு இந்திய மீனவர்களுக்கு 27.01.2021. அன்று.மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் கோப்பாவெளியில் இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த இந்திய மீனவர்கள் நான்கு பேருக்கும் மலர் மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி...

பொதுமக்கள் கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்ட 34 ஆவது ஆண்டு நினைவு தினம்

கொக்கட்டிச்சோலையின் 34 வது ஆண்டு படுகொலை தினம் மகிழடித்தீவு சந்தியில் அமைந்துள்ள “கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபி” முற்றத்தில் இன்று வியாழக்கிழமை (28)  காவல்துறையினரின் தடைகளையும் மீறி இடம்பெற்றது.இதன்போது நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தி, அகவணக்கம் செலுத்தி உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தனர்.1987ஆம் ஆண்டு, முதலைக்குடா இறால்...

புதன், 27 ஜனவரி, 2021

புதிய பேரூந்து நிலையத்தில் முதன்மை மொழியாக மாற்றம் பெற்ற சிங்களம்

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேரூந்து நிலையம் பொது மக்களின் பாவனைக்காக 27-01-2021.இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.முன்னைய நல்லாட்சி அரசின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம்,நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண நெடுந்தூர பேரூந்து நிலைய திறப்பு விழா, யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.இன்றைய...

செவ்வாய், 26 ஜனவரி, 2021

இலங்கை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் அறிக்கைக்கு இன்று பதில்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கான பதிலை-26-01-2021. இன்று செவ்வாய்க்கிழமை மாலை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கவுள்ள...

இராணுவத்திற்கு கிராமத்தில் இருந்தும் குறைந்தபட்சம் மூன்று இளைஞர்கள்

நாடளாவிய ரீதியில் இருக்கின்ற சகல பாதுகாப்பு படைத் தலைமையகங்களுக்கும் பிரதேச செயலக மட்டத்திலிருந்து ஆட்சேர்ப்பு செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஜனவரி, - மார்ச் மாதம் வரையில் இந்த ஆட்சேர்ப்பு திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதுடன், வர்த்தக மற்றும் பொதுச்சேவை பிரிவுகளில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பவே மேற்படி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுமேற்படி...

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 15 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுக.ள்24-01-2021. இன்று மட்டக்களப்பிலுள்ள கிழக்கு  ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.  கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ். ஊடக அமையம், தெற்கு ஊடக அமையம் மற்றும் தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம்...

சனி, 23 ஜனவரி, 2021

அத்தியாவசிய பொருட்களுக்கான நிலையான விலைகள் பெப்ரவரி முதல்

 நாட்டில் நேரடி இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பெப்ரவரி முதல் அமலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய பொருட்களுக்கான நிலையான விலையை பராமரிக்க ஒப்புக் கொண்டுள்ளனர் என்று வர்த்தக அமைச்சு செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் நேரடி இறக்குமதியாளர்களுடன் வர்த்தக அமைச்சில் நேற்று வர்த்தக அமைச்சர் பந்துல...

பெப்ரவரி மாதம் யாழ் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம், 25ஆம் திகதிகளில் கொவிட்-19 நிலைமைகளுக்கு ஏற்ப புதிய ஒழுங்குடன் இடம்பெறவுள்ளது.வழமையாக 1,500 மாணவர்கள் வரையில் தான் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவார்கள். ஆனால் இம்முறை அதற்கு முற்றிலும் மாறாக 2,500 மாணவர்கள் வரையில் பட்டம் பெறவுள்ளனர். கொரோனாப்...

நீதிமன்றம் பேரறிவாளன் விடுதலை முடிவுக்கு ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம்

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் வழங்கி உள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றில்  மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து...

இலங்கையில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ பிரான்ஸ் செல்வாக்கை பயன்படுத்தவேண்டும்

இலங்கையில் தமிழ்மக்களிற்கு எதிரான அடக்குமுறைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்கு பிரான்ஸ் தனது அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தவேண்டும் என பிரான்சின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனிற்க்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.இலங்கையில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதை...

வெள்ளி, 22 ஜனவரி, 2021

நாட்டில் சிறைக்கைதிகளுக்கு புதிய நடைமுறை?

நாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் Online ஊடாக தமது உறவினர்களுடன் உரையாடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனை சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கூறியுள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைகளுக்கு வருவது மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில்...

மீனவர்கள் தாக்கப்பட் டமைக்கு ஜனவரி 25 இல் கண்டன ஆர்ப்பாட்டம்

கடந்த ஜனவரி 18ஆம் திகதி, நமது கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த தங்கச்சிமடம் மெசியா, நாகராஜ், உச்சிப்புளி செந்தில்குமார், மண்டபம் சாம் ஆகிய 4 மீனவர்கள் சென்ற படகு மீது,சிறிலங்கா  கடற்படை வேகமாக வந்து மோதி நொறுக்கி மூழ்கடித்தது. உயிருக்குத் தத்தளித்த மீனவர்களை, மற்ற மீனவர்கள் வந்து காப்பாற்ற விடாமல் தாக்கி விரட்டி அடித்தது. கடலில் தத்தளித்த...

வியாழன், 21 ஜனவரி, 2021

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கனடா பிரம்டனில் அமைக்கப்டும்

முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபியொன்றை கனடாவின் பிரம்டனில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு;ள்ளது.பிரம்டன் மேயர் பற்றிக் பிரவுண் இதனை தெரிவித்துள்ளார்.இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டவேளை 75000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என பற்றிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை இலங்கைஅரசாங்கத்தின் கலாச்சார இனப்படுகொலையின்...

திங்கள், 18 ஜனவரி, 2021

குருந்தூர் மலையில் தொல் பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புத்தர் சிலை வைத்து வழிபாடு

முல்லைதீவு குருந்தூர் மலை,ஆதி சிவன் கோவிலுக்கு சொந்தமான நிலப்பரப்பில் தொல் பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 18-01-2021.இன்று புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.17-01-2021.அன்றய றைய தினம் முல்லைத்தீவு குருந்தூர் மலையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வருவதாக புகார்கள் எழுந்திருந்தன.படையிரின் ஏற்பாட்டில் குருந்தூர் மலையில் இன்று...

யாழ் மண்டைதீவில் காணி அபகரிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்

யாழ் மண்டைதீவு பிரதேசத்தில் வெலிசுமண கடற்படை முகாமுக்கு அருகில் சட்டவிரோதமான காணி அபகரிப்புக்கு எதிராக மக்கள் பிரதிநிதிகளும் மக்களும் இணைந்து 18-01-2021.இன்றுபோராட்டம் மேற்கொண்டுள்ளனர்.கடற்படையினருக்கு ஒரு அங்குலம் நிலத்தை கூட வழங்குவதற்கு ஒட்டுமொத்த தமிழ்மக்களும் தயாரில்லை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்தார்.18-01-2021.இன்று...
Blogger இயக்குவது.