புதன், 11 மே, 2022

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதாரண நிலை; இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதாரண நிலையை அடுத்து காவல்துறை மற்றும் இராணுவத்தினர் பல்வேறு இடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் போராட்டக்காரர்கள் வன்முறைச்சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவும் படைத்தரப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பதற்றத்தைத் தூண்டும் எந்தவொரு செயலிலும் பாதுகாப்புப் படை ஒரு போதும் ஈடுபடாது என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தரப்பினர் ஊடாக பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவர்களை குழப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளமை உண்மைக்கு புறம்பானது எனவும் அவரது கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



நாட்டில் மறு அறிவித்தல் வரை அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தம்

நாட்டில் மறு அறிவித்தல் வரை அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் (ஜிஎம்ஆர்) 
10-05-2022.நேற்று அறிவித்துள்ளார்.
அதன்படி, நேற்று இரவு முதல் அனைத்து இரவுநேர தபால் சேவை ரயில்களும் நிறுத்தப்பட்டன.காவல்துறை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, மறு அறிவித்தல் வரை அனைத்து ரயில்சேவைகளையும் இடைநிறுத்த ரயில்வே திணைக்களம்
 தீர்மானித்துள்ளது.
நாட்டில் பல்வேறு இடங்களிலும் அரசுக்கெதிரான அமைதி வழி போராட்டங்கள் தற்போது வன்முறை சம்பவங்களாக மாறியுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 10 மே, 2022

நாட்டில்ஏழு பேர் இறந்துள்ளனர் மற்றும் 220 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிப்பு

நேற்று திங்கட்கிழமை ஏழு பேர் இறந்துள்ளனர் மற்றும் 220 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை வட்டாரங்கள்
 தெரிவித்துள்ளன.
இமதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஏ.வி.சரத் குமார, அவரது இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 
உயிரிழந்துள்ளார்.
பிரதேச சபைத் தலைவர் நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் 
தெரிவித்தனர்.
இதேவேளை, நேற்று இரவு அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது கண்ணீர் புகைக்குண்டு வெடித்ததில் பொலிஸ் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் 
உயிரிழந்துள்ளார்.
24 வயதான காவல்துறை உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொழும்பில் உள்ள காலி முகத்திடல் மைதானத்தில் மாரடைப்பு காரணமாக மற்றுமொரு மூத்த பிரஜையும் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்.09-05-2022. நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இவ்வாறு ஆங்காகே நடந்த கலவரங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





மல்வானையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் வீட்டின் மீதும் தாக்குதல்

கொழும்பு அலரி மாளிகைக்கு எதிரில் மற்றும் காலிமுகத் திடலில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 09-05-2022.நேற்றும் .10-05-2022.இன்றும் பொதுமக்கள் முக்கிய பிரமுகர்களின் வீடுகள் மீது தாக்குதல்
 நடத்தியுள்ளனர்.
கம்பஹா மாவட்டம் மல்வானையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான வீடு என கூறப்படும் வீட்டின் மீது இன்று முற்பகல், பிரதேச மக்கள் சென்று தாக்குதல் நடத்தி , வீட்டுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
வீடு அமைந்துள்ள தோட்டத்திற்குள் சென்ற மக்கள் கல், மற்றும் பொல்லுங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்துடன் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான இந்த காணியில் மக்கள் வந்து வீடுகளை அமைத்து குடியேற வேண்டும் எனவும் தாக்குதல் நடத்த சென்றிருந்தவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற போது, விசேட அதிரடிப்படையினர் அங்கு இருந்ததுடன் மக்கள் தாக்குதல் நடத்தும் போது, அவர்கள் அதனை தடுக்க நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.அரச பணத்தை தவறான முறையில் பயன்படுத்தி, மல்வனை பிரதேசத்தில் மிகப் பெரிய காணி
 ஒன்றை கொள்வனவு செய்து, அதில் ஆடம்பர வீடு மற்றும் நீச்சல் குளத்தை நிர்மாணித்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் 
அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது உறவினர் திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்ககது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


திங்கள், 9 மே, 2022

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது

கொழும்பில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடி நிலையினை அடுத்து அண்மைய நாட்களாக பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்து. எனினும் பிரதமரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து கொழும்பில் கலவரம் வெடித்திருந்தது. இதன் பின்னர், கொழும்பிலும், பின்னர் மேல் மாகாணத்திலும் ஊரடங்குச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையிலேயே சற்று முன்னர் இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




ஞாயிறு, 8 மே, 2022

நாட்டுக்கு விரைவாக டொலரை பெற வழிமுறை சொல்லும் நிபுணர்கள்

நாட்டில் அந்நிய செலவாணியின் கையிருப்பு அடிமட்டத்தை எட்டியுள்ளதாக நிதியமைச்சர் அலி சப்ரி அண்மையில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் நெருக்கடியை சமாளிக்கக் கூடிய வகையில் டொலரினை பெற்றுக்கொள்ள பொருளாதார நிபுணர்கள் வழிமுறைகளை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தி வருகின்றனர்.
அதற்கமைய நாட்டில் ஏற்கனவே பதிவு செய்யப்படாத வாகனங்களை மீள் ஏற்றுமதி செய்வதன் மூலம் விரைவாக அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் என பொருளாதார ஆய்வாளர்கள்
 தெரிவிக்கின்றனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



சனி, 7 மே, 2022

யாழ். மாவட்ட மக்களுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர அறிவுறுத்தல்

யாழில் சமூக மற்றும் குடும்ப வன்முறைகளில் ஈடுபடாதிருக்கவும், மதுபானம் போதைப்பொருள் பாவனைகளால் தாமாக நோயேற்படுத்தும் தன்மையைத் தவிர்த்து சுகாதார சேவைக்கு ஒத்துழைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் யாழ். மாவட்ட மக்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் மருந்துகளின் தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவுறுத்தல்
 வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில்.07-05-2022.l நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும்,சேலைன் முதற்கொண்டு அத்தியாவசிய மருந்து பொருட்களின் கையிருப்பு மிகவும் குறைந்து சென்றுள்ளதுடன் தேசிய மருந்து தட்டுப்பாடு அபாய நிலை காரணமாக சத்திர சிகிச்சை செயற்பாடுகளை பாரிய அளவில் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளும், அவசர நரம்பியல் சத்திர சிகிச்சைகளும், கர்ப்பிணித் தாய்மார்களிற்கான அவசர சத்திர சிகிச்சைகளும்
 மட்டுமே நடைபெறும்.
மேலும் சில சத்திர சிகிச்சை கூடங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன. இந்த நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு மக்கள் அனைவரையும் ஒத்துழைக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.
அநாவசிய பயணங்களை குறைப்பதாலும் மட்டுப்படுத்திய வேக கட்டுப்பாட்டுடன், சிரத்தையான வாகன செலுத்துகைகளை மேற்கொண்டு வீதி விபத்துக்களை தவிர்க்குமாறு கேட்டுக்
 கொள்கிறோம்.
சமூக மற்றும் குடும்ப வன்முறைகளில் ஈடுபடாதிருக்கவும், மதுபானம் போதைப்பொருள் பாவனைகளால் தாமாக நோயேற்படுத்தும் தன்மையைத் தவிர்த்து சுகாதார சேவைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>






Blogger இயக்குவது.