புதன், 28 அக்டோபர், 2026

இன்று லண்டனுக்குப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாகத் தரையிறக்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (28) பிற்பகல் இங்கிலாந்தின் லண்டன் நகர் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-503 என்ற Airbus A330 ரக விமானம், புறப்பட்ட சிறிது 
நேரத்திலேயே பறவை மோதியதால் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது
குறித்த விமானம் இன்று பிற்பகல் 12:55 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிறுவனத் தொடர்பாடல் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
விமானத்தில் 269 பயணிகளும் 15 பணியாளர்களும்
 இருந்துள்ளனர்.
பறவை மோதியதைத் தொடர்ந்து, விமானி வான்வெளியிலேயே நிலைமையைக் கட்டுப்படுத்தி, விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.
தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு அவர்களுக்குத் தேவையான உபசரிப்புகளை வழங்க ஸ்ரீலங்கன் விமான சேவை நடவடிக்கை எடுத்தது.
பின்னர், அந்தப் பயணிகளை வேறொரு விமானம் மூலம் இங்கிலாந்தின் ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதிப்புக்குள்ளான விமானம் தற்போது பழுதுபார்க்கும் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் ஹோமாகம பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது

நாட்டில் பொலிஸ் காவலில் இருந்த போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது 
செய்யப்பட்டுள்ளா
போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர், ஹோமாகம பொலிஸ் நிலையக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த சம்பவத்திற்காக அவர் பணி இடைநீக்கம்
 செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அவருக்கு மேலதிகமாக, அப்பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவையும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கிரிவத்துடுவை பிரதேசத்தைச் சேர்ந்த இஷார ஹர்ஷ குமார எனும் 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் 
தந்தையாவார்.
பொலிஸாரின் கடுமையான தாக்குதல் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 27 அக்டோபர், 2026

நாட்டில் இன்று முதல் யாழ். நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகள்

யாழ் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகில் உள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான நெடுந்தூரப் பேருந்து சேவைகள்27-10-2027- இன்று 
செவ்வாய்க்கிழமை முதல் இணைந்த நேர அட்டவணையின் கீழ் ஆரம்பமாகும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்
து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.
.பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்தும் வகையில், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொறுப்பின் 
கீழ் இணைந்த நேர அட்டவணைக்கு அமைய பேருந்துச் சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் பணித்துள்ளது. அதற்கமையவே இம்முறை சேவைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
சுமார் 134 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு, நீண்டகாலமாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்த இந்த நெடுந்தூரப் பேருந்து
 நிலையத்தைச் செயற்படுத்துவதற்குக் கடந்த காலங்களிலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அவை வெற்றியளிக்கவில்லை.
பேருந்து நிலையத்தைச் செயல்படுத்துவது தொடர்பில் வட இலங்கை தனியார் பேருந்து சங்கத்தால் வீதிப் பயணிகள் போக்குவரத்து
 அதிகார சபைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. தற்போது நீதிமன்றத்தி
ன் பணிப்புக்கு அமைவாக, இணைந்த நேர அட்டவணையின்
 கீழ் பேருந்துச் சேவைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனவே, செவ்வாய்க்கிழமை முதல் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்குச் செல்லும் நெடுந்தூரப் பேருந்துகள் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் மேலும் தெரிவித்தார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கைது

இலங்கைக்கு இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் தகவலின்படி, 50 வயதான இந்த சந்தேகநபர் நேற்று (அக்டோபர் 26) இரவு இலங்கையை வந்தடைந்த சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், கடந்த 2015ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது 
செய்யப்பட்டிருந்தார்.
இந்திய நீதிமன்றத்தில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அண்மையில் தண்டனைக் காலம் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, இந்திய அதிகாரிகளால் அவர் இலங்கைக்கும் நாடு கடத்தப்பட்டார்.. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் கன மழை காரணமாக மன்னாரில் 50 குடும்பங்கள் தற்காலிக முகாமில்

நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் இதுவரை 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 நபர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இடம் பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நடராஜா சூரிய ராஜா தெரிவித்துள்ளார்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கூறாய் கிராமத்தைச் சேர்ந்த 29 குடும்பங்களும்,சீது விநாயகர் குளம் கிராமத்தை சேர்ந்த 21 குடும்பங்கள் உள்ளடங்களாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 நபர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இலுப்பைக்கடவை பாடசாலை யில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த இரு கிராமங்களுக்குமான பாதைகளில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டுள்ளதோடு,குறித்த இரு கிராமங்களிலும் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள
 தெரிவித்துள்ளனர்.
மேலும் சாந்திபுரம் கிராமத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் 4 வீடுகள் சேதமடைந்துள்ளது டன் 4 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு 
அவசர உதவிகளை மேற்கொள்ள துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் நடராஜா சூரிய ராஜா தெரிவித்தார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 26 அக்டோபர், 2026

நாட்டில் மரக்கறி விலைகள் அதிகரிப்பு முட்டை, கோழி இறைச்சி கொள்வனவு வீழ்ச்சி

தற்போது நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதுடன், கோழி இறைச்சி மற்றும் முட்டை கொள்வனவும் 20 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த வாரம் 350 முதல் 400 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் தக்காளியின் விலை தற்போது 600 முதல் 650 ரூபா வரை அதிகரித்துள்ளது.
அதேபோன்று, 250 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு கிலோகிராம் குடை மிளகாயின் விலை 400 முதல் 450 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன், 150 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் கோவாவின் விலை 350 ரூபா 
வரை உயர்ந்துள்ளது.
கொழும்பு மெனிங் பொதுச் சந்தையில் இந்த விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கோழி இறைச்சி மற்றும் முட்டை கொள்வனவு 20 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர
 தெரிவித்துள்ளார்.
ஒரு முட்டையின் உற்பத்திச் செலவு 30 முதல் 32 ரூபா வரை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
எனினும், பண்ணைகளிலிருந்து சந்தைக்கு முட்டைகள் குறித்த விலைகளின் அடிப்படையில் விநியோகிக்கப்படுவதால், உற்பத்தியாளர்களால் போதிய இலாபத்தை ஈட்ட முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை: சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு முக்கியஅறிவிப்பு

தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாளை (27) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான 
செய்முறைப் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு நடைபெறும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி, உரிய பரீட்சை நிலையங்களில் செய்முறைப் பரீட்சைகள் எவ்வித மாற்றமுமின்றி நடைபெறும் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.