நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்.31-07-2026- இன்று அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல்
திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில், சில இடங்களில் 100 மிமீக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும். அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட காலநிலை நிலவும்.
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய
மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக