சனி, 4 ஜூலை, 2026

நாட்டில் டிஜிட்டல் பாதையில் கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகள்

நாட்டில் அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் "eAyurvedic" என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை நவீனப்படுத்தி, மக்களுக்கு விரைவான மற்றும் இலகுவான 
சேவைகளை வழங்குதல்.
இத்திட்டம் தற்போது அம்பாறை மாவட்டம் மற்றும் கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக, கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு கணினிகள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் 
நடைபெற்றது.
டொக்டர் யூ.எல்.நிகாயா (கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர்) டொக்டர் எம்.ஏ.நபீல் (கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர்) வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் (கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்) இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டொக்டர் பாலமுரளி அவர்களால், இந்த "eAyurvedic" செயலி 
எவ்வாறு இயங்குகிறது 
மற்றும் இதனால் பொதுமக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் குறித்து விரிவான விளக்கமளிக்கப்பட்டது.
பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதத்துடன் நவீன தொழில்நுட்பம் இணைக்கப்படுவது, நோயாளர்களின் தரவுகளைப் பேணவும், சிகிச்சைகளை முறைப்படுத்தவும் பெரிதும் உதவும்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.