சனி, 11 ஜூலை, 2026

ஒன்பது மாகாணங்களுக்கு பிரான்சில் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு

அடுத்த வாரம் பிரான்ஸில் கடுமையான வெப்ப அலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அரசாங்கம் “ஓர்செக் தீவிர வெப்பத் திட்டத்தை” செயல்படுத்தும் என அறிவித்துள்ளது.
குறிப்பாக சிவப்பு எச்சரிக்கையின் கீழ் உள்ள மாகாணங்களுக்கு இந்த வெப்பத் திட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் மேற்குப் பகுதியில் உள்ள ஒன்பது 
மாகாணங்கள் தீவர வெப்பநிலைக்குரிய சிவப்பு எச்சரிக்கையின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் 72 மாகாணங்கள் ஆரஞ்சு எச்சரிக்கையின் கீழ் உள்ளன என்று தேசிய வானிலை முன்னறிவிப்பாளரான மெட்டியோ பிரான்ஸ் கூறியுள்ளது  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.