திங்கள், 20 ஜூலை, 2026

யாழ் வல்வெட்டித்துறை நகரசபை உபதவிசாளர் கந்தசாமி சதீஸ் கைது

நாட்டில் வெலிக்கடை சிறை கலவரத்தின் போது படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக ஏற்பாட்டாளர்களுள் ஒருவரும் முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உபதவிசாளருமான கந்தசாமி சதீஸ் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை எதிர்வரும் 25ம் திகதி வல்வெட்டித்துறையில் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்பாட்டு குழுவின் சார்பில் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உபதவிசாளர் சதீஸ் வல்வெட்டித்துறை காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாத நடவடிக்கைகளினை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுவதாக குற்றஞ்சுமத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட கந்தசாமி சதீஸ் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில்
 விடுவிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கந்தசாமி சதீஸை பிணையில் பொறுப்பேற்க தமிழீழ விடுதலை இயக்க முக்கிய பிரமுகர்கள் எவரும் நீதிமன்றிற்கு வருகை தந்திராத நிலையில் தனது
 மைத்துனனின் உதவியில் அவர் பிணையில் 
விடுவிக்கப்பட்டுள்ளார். 
1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை வன்முறை சம்பவங்களின் உச்ச கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கதுரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் சிங்கள கடையர்களாலும் சிறைச்சாலை அதிகாரிகளாலும் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தமை.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.