நாட்டில் வருடாந்திர பேருந்துக் கட்டணத் திருத்தத்தின்படி, புதிய கட்டணத் திருத்தம்.06-07-2026- இன்று முதல் அமுலுக்கு
வந்துள்ளது.
பேருந்துக் கட்டணங்களை 12 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்துவதற்கு தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு சமீபத்தில்
ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கமைய முன்னர் 30 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் தற்போது 34 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சொகுசுப் பேருந்துக் கட்டணம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் செல்லும் பேருந்துக் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
புதிய பேருந்துக் கட்டணத் திருத்தம் குறித்து பேருந்து ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, தங்களது பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களைப் புதுப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று முதல் நாடு முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக