பூனைகள் மூலம் இலங்கையில் ரேபிஸ் தொற்று பரவுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பதிவான பெரும்பாலான ரேபிஸ் தொற்றுகள் பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான பூனைகளால் ஏற்பட்டதாக தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆபத்தான நோயாக கருதப்படும் ரேபிஸ் நோய்,
நாய்கள், பூனைகள், நரிகள், அணில்கள், வௌவால்கள், கீரிகள், கால்நடைகள் மற்றும் குதிரைகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட விலங்குகளின் கடி அல்லது கீறல்கள் மூலம் பரவக்கூடும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது
.என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக