வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

இலங்கை போக்குவரத்து சபையில் வரலாற்றில் முதல் முறையாக பெண் நடத்துனர்கள்

இலங்கை போக்குவரத்து சபையின் வரலாற்றில் முதல் தடவையாக 19 பெண் நடத்துனர்கள் நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கொழும்பு, மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ விழாவின் போது இந்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, போக்குவரத்துத் துறையில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் நோக்கில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று 
குறிப்பிட்டார்.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதவியேற்றது முதல், போக்குவரத்துத் துறையில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் துன்புறுத்தல்களைக் குறைக்கவும், பெண்களுக்கான சம வாய்ப்புகளை வழங்கவும் முன்னெடுத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த நியமனங்கள் அமைந்துள்ளதாக அவர் 
மேலும் தெரிவித்தார்.
இந்த வரலாற்று நிகழ்வின் போது, புதிதாக நியமிக்கப்பட்ட பெண் நடத்துனர்களுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட புதிய சீருடைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த நியமனங்கள் மூலம், இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையில் பெண்களின் பங்களிப்பு ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளதாகக் கருதப்படுகிறது.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.