வெள்ளி, 8 டிசம்பர், 2023

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயத்தில் ஜோதிடர் எச்சரிக்கை

கிளிநொச்சி குளத்திற்கு பின்புறமாகவும் இரத்தினபுரம் நகரத்துக்கு பின்புறமான பகுதிகளில் பலர் குளத்திற்கு உரிய காணிகளை மண்ணைப் போட்டு நிரவி கட்டிடங்களை கட்டுவதும், தென்னை 
போன்ற மரங்களை நடுவதிலும் பல ஏக்கர் காணிகள் அதாவது நீர் தேங்கும் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இது எதிர்காலத்தில் சென்னை போன்ற ஒரு நிலையை #கனகாம்பிகை குளம்,திருவையாற்றின் பின்புறம் என்று கூறக்கூடிய ஒரு பகுதி கிளி #மத்தியகல்லூரியை அண்டிய பகுதிகளை நீரில் மூழ்கச் செய்யும் 
அபாயம் உள்ளது. 
ஆகவே இப்பொழுதே இது தொடர்பாக மக்களும் அதிகாரிகளும் விரைந்து #முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாழ்மையோடு வேண்டிக் கொள்கின்றேன். 
 எனது இந்த எச்சரிக்கை ஆனது அனைத்து குளங்களையும் ஆக்கிரமிப்பவர்களுக்கு உரியது. அந்த அந்தப் பகுதி மக்கள் இப்பொழுதே விரைந்து செயல்பட வேண்டும். இப்படிக்கு சோதிடர் பரமேஸ்வரன் சுதாகர்
.கூறியுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.