சனி, 2 டிசம்பர், 2023

ரொறன்ரோவில் சட்டவிரோத வாகனத்தரிப்பு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது

கனடாவின் ரொறன்ரோவில் சட்டவிரோத வாகனத் தரிப்பு அபாராதம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகரசபை அல்லது தனியார் இடங்களில் சட்டவிரோதமான முறையில் 
வாகனங்களை தரித்து நிறுத்துவோரிடம் அபராதம் அறவீடு
 செய்யப்பட உள்ளது.
 இதுவரையில் இவ்வாறு சட்டவிரோதமான வாகனத்தை நிறுத்துவோரிடமிருந்து 30 டொலர்கள் அபராதம் அறவீடு செய்யப்பட்டது. இனி வரும் காலங்களில் இந்த அபராதத் தொகை 75 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் முதல் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அபராதத் தொகை குறைவானதாக காணப்பட்டதனால் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதில் சிரமங்கள் நிலவி வருவதாக 
காவல்துறையிர் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.