ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள விடுத்த அழைப்பின் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள தபாலகங்கள்.11-12-2023. இன்று திங்கள் காலை முதல் மூடப்பட்டுள்ளன.
மேலும் மன்னார் பிரதான தபாலகம்.11-12-2023. இன்றைய தினம் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை
இதன் காரணமாக பல்வேறு தேவைகள் நிமித்தம் தபாலகங்களுக்கு வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதை காணமுடிந்தது.
இன்றும், நாளையும் (12) தபாலகங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தபால் சேவையை பெறவுள்ள மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக