செவ்வாய், 26 டிசம்பர், 2023

யாழ் தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் சிங்கள மக்களுக்கு விளக்கம்

யாழ் தையிட்டியில் சட்ட விரோத விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினங்களிலும் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வரும் போராட்டம் நேற்று தொடங்கி பௌர்ணமி தினமான 26.12.2023 இன்று மாலை 
வரை இடம்பெற்றது. 
 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் இந்தப் போராட்டத்தில் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன், உறுப்பினர்கள், கிராம மக்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 தமிழர் காணிகளை ஆக்கிரமித்து இராணுவத்திற்கு சட்டவிரோத விகாரை- உடனே அகற்று, தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களை சட்ட விரோதமாக அபகரிக்காதே, சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு 
காவல்துறையே துணை போகாதே போன்ற வாசகங்கள் மும்மொழிகளிலும் எழுதப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர். 
பௌர்ணமி தினமாகையால் தென்பகுதியிலிருந்து 
சிங்கள மக்களும் குறித்த விகாரைக்கு வழிபட வந்திருந்தனர். 
அவர்களுக்கு இது இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட தமிழர்களின் பூர்வீக மண் என்பது தொடர்பில் சிங்களத்தில் தெளிவுபடுத்தப்பட்டமை 
என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.