வெள்ளி, 15 டிசம்பர், 2023

யாழ் கீரிமலை பகுதியில் மக்கள் காணி அபகரிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு போராட்டம்

யாழ் கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில்.15-12-2023.இன்று வெள்ளிக்கிழமை அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள் நில அளவை திணைக்களத்தினரின் வாகனத்தை மறித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 29 ஏக்கர் நிலம் அளவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தமை  என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.