செவ்வாய், 5 டிசம்பர், 2023

இலங்கை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையில் பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு
 தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் சபை முதல்வாரன, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் அண்மையில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சின் 
வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் முன்னேற்றங்கள் 
மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம், ஒவ்வொரு பிள்ளையும், 17 ஆண்டுகளில் பாடசாலைப் படிப்பை முடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
4 வயதில் முன்பள்ளியும், ஆரம்பப் பிரிவு 1 முதல் 5 ஆம் தரம் வரையிலும், கனிஷ்ட பிரிவு தரம் 6 முதல் தரம் 8 வரையிலும், சிரேஷ்ட பிரிவு தரம் 9 முதல் தரம் 12 வரையிலும் வகைப்படுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேநேரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலகுவாக்கி போட்டியை நீக்குவதற்கும் கல்வி அமைச்சு முன்மொழிந்துள்ளது.
அத்தோடு, உத்தேச புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம், 10ஆம் ஆண்டில் சாதாரணதரப் பரீட்சையையும், 12ஆம் ஆண்டில் 
உயர்தரப் பரீட்சையையும் நடத்த கல்வி அமைச்சு 
முன்மொழிந்துள்ளது.
இதற்கிடையில், சாதாரணதரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 9 இல் இருந்து 7 ஆகக் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக 
கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கு 517.05 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், பாடசாலை பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக இரண்டாயிரம் மில்லியன் ரூபாவும், பாடசாலை சீருடைக்காக 6 மில்லியன் ரூபாவும், 7 இலட்சத்து 28 ஆயிரத்து 480 பாடசாலை மாணவர்களுக்குக் காலணிகளை வழங்குவதற்கு 2 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவும் 
ஒதுக்கப்பட்டுள்ளன.
சுமார் 1.07 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்குத் தற்போது 
மதிய உணவு வழங்கப்படுவதாகவும், 2024 ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் மாணவர்களுக்கு உணவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் இதன்போது கூறியுள்ளமை
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>> 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.