பிரான்சில் 303 இந்தியர்களுடன் Châlons-Vatry விமான நிலையத்தில் இரண்டு நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள விமானம் ஒன்று திரும்பிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை குறித்த விமானம் Châlons-Vatry விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டது.
முதலில் விமானக் குழு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் பயணிகளில் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், அவர்கள் அனைவருடனும் விமானம் உடனடியாக பிரான்சில் இருந்து புறப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 25-12-2023. திங்கட்கிழமை நண்பகலுக்குள்ளாக அது விமான நிலையத்தில் இருந்து புறப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக