திங்கள், 4 டிசம்பர், 2023

நில மீட்புக்கான தொடர் உண்ணா விரதப் போராட்டம் திருகோணமலையில்

திருகோணமலை,வெல்கம் விகாரை வனப்பகுதியில் பாரிய அளவிலான காணிகள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து 
அப்பகுதி மக்கள் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
எவ்வாறு இருப்பினும் இதுவரை எந்த ஒரு அரச அதிகாரிகளும் இது தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையில் திருகோணமலை – 
அனுராதபுரம் பிரதான வீதியினை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த உப்புவெளி பொலிஸார் இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்துரையாடுவதற்கு உதவி செய்வதாக உறுதியளித்ததை அடுத்து 
அவ்வீதியூடான 
போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அப்பகுதி மக்களால் சாகும் வரையான உண்ணா
 விரதப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.