நாட்டில் 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள 2,298 பரீட்சை நிலையங்களில் ஜனவரி 31ஆம் திகதி வரை உயர்தர பரீட்சை இடம்பெறவுள்ளது.
பரீட்சைக் கால அட்டவணைகள் மற்றும் அனுமதி
அட்டைகள் என்பன பாடசாலை அதிபர்களுக்கும் தனியார் விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின்
உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk எனும் இணையத்தளத்தின் மூலம் தங்களின் உரிய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக