திங்கள், 14 அக்டோபர், 2024

இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத்துக்கு தடை கோரி வழக்கு தாக்கல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் பொதுச்செயலாளர், நிர்வாகச் செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க 
இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனவும் 2024 ஜனவரி மாதத்தின் பின்னர் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானங்களை 
சட்டவலுவற்றதாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா
 வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
 அதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோர் எதிராளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
 மட்டக்களப்பு - கோட்டைக் கல்லாறைச் சேர்ந்த
 முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா என்பவரால் கடந்த 10 ஆம் திகதி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 13 அக்டோபர், 2024

நாட்டில் ஓய்வூதியதாரர்களுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

நாட்டில்  அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாவை அடுத்த வாரம் முதல் வழங்குமாறு
 ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபா ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் சேர்க்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி, அதே தொகையை அடுத்த வாரத்திற்குள் ஓய்வூதியர்களின் கணக்கில் வரவு வைக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். 
அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு 24/08/2024 திகதியிடப்பட்ட அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 02/2024 வெளியிடப்பட்ட போதிலும், அதற்கான பணம் எதுவும் ஒதுக்கப்படவில்லை.
 இதனை ஆராய்ந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இது தொடர்பான பணத்தை வழங்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 12 அக்டோபர், 2024

நாட்டில் முன்னாள் அரசியல் வாதிகளில் பதின்ஒரு பேர் மாத்திரமே வீடுகளை காலி செய்துள்ளதாக தகவல்

நாட்டில் கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து அரசாங்க வீடுகளில் வசித்த 31 அரசியல்வாதிகளில் 11 பேர் மாத்திரமே வீடுகளைகாலி செய்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு 
தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கங்கள் அமைச்சர்களின் பாவனைக்காக கொழும்பு நகரில் வீடுகளை ஒதுக்கியிருந்தன. புதிய அரசாங்கத்தின் கொள்கை குறித்து கேட்டதற்கு, பின்னர் முடிவு செய்யப்படும் என்று அந்த 
வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது அரசாங்க அதிகாரத்தை வைத்திருக்கும் தேசிய மக்கள் சக்தி (NPP) செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது 
விதவைகளின் சலுகைகளை குறைக்க உறுதியளித்துள்ளது. 
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 11 அக்டோபர், 2024

இலங்கை ஜனாதிபதியின் புகைப்படங்களை வௌியிட அனுமதி பெற வேண்டும்

இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளுக்காக பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவு சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி
 செயலகத்தின் எழுத்துமூல அனுமதியை அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பெறுமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
 அரச நிதியைப் பெற்று மேற்கொள்ளப்படும் பணிகளை ஏற்பாடு செய்யும் போது அரசாங்கத்தின் கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக செயற்படுவது அவசியமானது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் அரச நிறுவனங்களுக்கு மேலும் அறிவித்துள்ளார்.
 அனைத்து அமைச்சின் செயலாளர்கள், அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபன சபைகள் உள்ளிட்ட சட்டபூர்வ நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரசிற்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுக்கு 
ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் இந்த அறிவித்தலை வழங்கியுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 10 அக்டோபர், 2024

கொழும்புக்கு போதைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் கைது

கொழும்புக்கு ஆறு கோடி ரூபா பெறுமதியான Pregab எனப்படும் 599,000 சட்டவிரோத போதைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் ஒருவர் பொரளையில் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மன்னார் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே கைது 
செய்யப்பட்டுள்ளார்.
பொரளை போக்குவரத்து சமிக்ஞைக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
 கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறியும் மேலதிக விசாரணைகளுக்காக 
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​மன்னார் பகுதியைச் சேர்ந்த
 சுஜி என்ற நபரே படகில் வந்து சிலாவத்துறை
 பாலத்திற்கு அருகில் போதைப்பொருள் கையிருப்பைக் கொடுத்ததாகவும், குறித்த போதைப்பொருளை கொழும்பு பகுதிக்கு
 கொண்டு வருமாறு அறிவுறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 9 அக்டோபர், 2024

வாக்கெடுப்பின்றி ஜெனிவாவில் நிறைவேறியது தீர்மானம்

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான இலங்கைக்கு எதிரான தீர்மான வரைவு வாக்கெடுப்பின்றி ஐ. நா.மனித உரிமைகள் பேரவையில் 
நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான A/HRC/57/L.1 தீர்மான வரைவு வாக்கெடுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57வது கூட்டத்தொடரில் குறித்த தீர்மான வரைவு நிறைவேற்றப்பட்டமை
 குறிப்பிடத்தக்கது.
51/1 பரிந்துரையின் நிர்பந்தத்தை நீட்டிக்கக் கோரி இன்று இச்சபையில் முன்வைக்கப்பட்டுள்ள வரைவுப் பரிந்துரையை நிராகரிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை அறிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





செவ்வாய், 8 அக்டோபர், 2024

கடந்த அரசாங்கத்தின் கொள்கையை ஐ.நா தீர்மானத்தில் பின்பற்றும் இலங்கை புதிய அரசாங்கம்

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்  சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை கடந்த அரசாங்கங்களைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கமும் 'வலுவாக நிராகரிக்க' தீர்மானித்துள்ளது.
புதிய அரசாங்கம் கலந்துகொள்ளும் முதலாவது ஜெனீவா அமர்வு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடராகும், இது இம்மாதம் 11ஆம் திகதி நிறைவடைகிறது.
இணைத் தலைமை (Core Group) எனப்படும் ஆறு நாடுகள் ஒன்றிணைந்து, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும்
 மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக 2021 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு
 மேலும் கால அவகாசம் வழங்குவதற்கு இந்த ஆண்டு வரைபில் முன்மொழியப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு எதிராக வெளிவிவகார அமைச்சர் முன்வைத்த விடயங்களை நேற்று (ஒக்டோபர் 7) கூடிய அமைச்சரைவை 
குழு பரிசீலித்தது.
“இந்தப் பிரேரணையில் உள்ள பல விடயங்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், புதிய அரசாங்கம் மனித உரிமைகளை பாதுகாக்க புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
அதற்கு எமக்கு சிறிது கால அவகாசம் தேவை” என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (ஒக்டோபர் 8) கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
"மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 51/1 அடிப்படையில் தொடர்புடைய அனைத்து பணிகளையும் நீட்டிப்பது, அவையின் 58ஆவது அமர்வில், ஐ நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வாய்மொழியாக
 ஒரு அறிக்கையை அளிப்பது மற்றும் 60ஆவது
 அமர்வின் போது, 
இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் விவாதிக்கப்படக் கூடிய முழுமையான அறிக்கையை முன்வைக்கவும்” இந்த வருடம் ஜெனீவா அமர்வில் முன்வைக்கப்படும் வரைபில், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் கோரியிருந்தது.
பதினைந்து வருடங்களாக நீதி கிடைக்காத போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அரசாங்கத்தின் தாமதம் தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நிறுவப்பட்டுள்ள வெளி 
சாட்சிய சேகரிப்பு பொறிமுறையின் அதிகாரங்களை 
நீடிப்பதற்கான எந்தவொரு முன்மொழிவுக்கும் உடன்படுவதில்லை எனவும் இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


Blogger இயக்குவது.