திங்கள், 5 ஆகஸ்ட், 2024

யார் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற வினாவிற்க்கான விடை இன்று

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள பொதுவேட்பாளர் யார் என்ற விவரம் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பாளர் பெயர்ப் பட்டியலில் 3 பேரின் பெயர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற 
முன்னாள் உறுப்பினர் அரியநேந்திரனுக்கே வாய்ப்பு அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகள் ஏழினது பிரதிநிதிகளும் கூட்டிணைந்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை உருவாக்கியிருந்தனர்.
இந்தப் பொதுக்கட்டமைப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொதுவேட்பாளரைக் கண்டறிவதற்கு உப குழுவை நியமித்திருந்தது. அந்தக் குழு பல்வேறு தரப்புகளுடனும் பேச்சு 
நடத்தியிருந்தது.
இலங்கைத்தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரது 
பெயர்களே இறுதிப் பட்டியலில் உள்ளதாகத் 
தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் தொடர்பாக 
உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்பது  குறிப்பிடத்தக்கதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதிகள் காலம் தாழ்ந்தவை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாண சபைகள் தொடர்பில் வெளிப்படுத்தியுள்ள கரிசனைகள் காலந்தாழ்ந்தவையாகவே உள்ளதென்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன்
 தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பை அடுத்து 
மாகாண சபை தேர்தல் திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றுவதற்கும்ரூபவ் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு 
தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் மாகாண சபைகளை வினைத்திறனான முறையில் முன்னெடுப்பதற்கு ஏற்கனவே நான் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தேன்.
அப்போது திருத்தங்களை மேற்கொள்வதற்கான வரைவுகளையும் சமர்ப்பித்திருந்தேன். ஆனால் ஜனாதிபதி அதனை 
முன்னெடுப்பதற்கு தயாராக இல்லாத நிலையிலேயே இருந்தார். இந்த நிலையில் தற்போது மாகாண சபைகளுக்கான தேர்தலை முன்னெடுப்பதற்காக தேர்தல் திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றுவதற்கு 
இணங்கியுள்ளார்.
அதுமட்டுமன்றி இன்னமும் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு அவர் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கூறியதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வாக்குறுதி அளித்தபடி விடயங்களை 
முன்னெடுத்தால் சிறந்தது.
எனினும், அவர் அத்தகைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான காலத்தினை தவறவிட்டுள்ளார். இப்போது காலம் தாழ்த்தப்பட்டுவிட்டது. மேலும் அவர் அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றுவார் என்பதற்கும் எந்தவிதமான உத்தரவாதங்களும் இல்லை.
அதேநேரம், மாகாண சபைகளை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற சட்ட திருத்தங்கள் மீளப்பெற முடியாதவையாக இருக்க வேண்டும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். ஏனென்றால் கடந்த காலத்தில் மாகாண சபைகளுக்கான சட்டங்கள்
 மீளப் பறிக்கப்பட்டு விட்டன.
ஒற்றையாட்சிக் கட்டமைப்புள்ள இந்த நாட்டில் அதிகாரங்களை பறிப்பது தொடர்கதையாகவே உள்ளது.
1987ஆம் ஆண்டு மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர், கிராமசேவகர் ஆகியோரை நிர்வகிக்கும் அதிகாரம் மாகாண சபைக்கு
 காணப்பட்டாலும் 1992இல் ரணசிங்க பிரேமதாசவினால் மாற்றியமைக்கப்பட்டமையால் மாகாணங்கள் அந்த 
அதிகாரங்களை இழந்தன.
இதனால், முதலமைச்சராக நான் இருந்தகாலத்தில் மாவட்டங்களை நிர்வகிப்பதற்கு நெருக்கடியான சூழலுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது என்றார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 3 ஆகஸ்ட், 2024

தொழில் வல்லுநர்களின் பொறுப்பு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது என ஜனாதிபதிதெரி வித்துள்ளார்

புதிய பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஒன்றிணைவது பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 
தேர்தல் மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை கடன் வாங்குவதனால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 
யாழ்.மாவட்ட அறிஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுடன் 02.-08-2024.அன்று  இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.  
முன்னைய தவறுகள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொண்டு புதிய பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு பங்களிப்பது இந்த நாட்டின் அறிஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

நாட்டில் பல தரப்பினரையும் சந்தித்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்

இலங்கையின் சமகால பொருளாதார நிலைவரம் மற்றும் மறுசீரமைப்புக்களில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் நோக்கில் இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச நாணய நிதிய$
 அதிகாரிகள் குழு, ஜனாதிபதி, எதிர்க்கட்சித்தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை 
நடத்தியுள்ளது.
 சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையினால் எட்டப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் நாட்டின் பொருளாதாரத்தில் அடையப்பட்டுள்ள சாதக மாற்றங்கள் மற்றும் நாணய 
நிதியத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை 
நடைமுறைப்படுத்துவதில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்பன தொடர்பில் ஆராயும் நோக்கில் சர்வதேச நாணய
 நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப்பிரதானி பீற்றர் ப்ரூவர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கொழும்புக்கு
 வருகைதந்துள்ளனர். 
 இதன்போது அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ
 தலைமையிலான பிரதிநிதிகள், வர்த்தக அமைப்புக்களின் தலைவர்கள், தொழிற்சங்கப்பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர். 
 இச்சந்திப்புக்களின் முடிவில் ஊடக சந்திப்பொன்றை நடாத்துவதற்கு உத்தேசித்திருக்கும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், அதில் தமது அவதானிப்புக்கள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து
 அறிவிக்கவுள்ளனர். 
அது இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் மூன்றாம் கட்ட மீளாய்வாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.குறிப்பிடத்தக்கது  என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 1 ஆகஸ்ட், 2024

இலங்கையில் ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்வது தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில்.01-08-2024. இன்றுமுதல் ஒன்லைன் முறையின் மூலம் ஆசனங்களை முன்பதிவு செய்யும் நேரம் திருத்தப்படவுள்ள போதிலும், அது செய்யப்படாது என ரயில்வே திணைக்களம் 
தெரிவித்துள்ளது.  
ஆன்லைன் முறை மூலம் தினமும் இரவு 7.00 மணிக்கு சீட் ஒதுக்கீடு துவங்கி, திருத்தம் செய்து காலை 10.00 மணிக்கு தொடங்க முடிவு 
செய்யப்பட்டது.
 ஆனால், ரயில்வே துறை துணைப் பொது மேலாளர் எம். என். ஜே. திரு.இடிபோலகே தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது  என்பதாகும்  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 31 ஜூலை, 2024

யாழ் சாவகச்சேரி வைத்தியர் அர்ச்சுனா மீதான வழக்கு: நீதிமன்றில் நடந்தது என்ன

யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா மீதான வழக்குகள் இன்றையதினம்(31) சாவகச்சேரி நீதிமன்றில் நீதிபதி அ.யூட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை, தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா
 மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட 5 வழக்குகளே
 குறித்த தினத்தில் விசாரணைக்கு
 எடுக்கப்பட்டிருந்தது
 இதன்போது வைத்தியர் அர்ச்சுனா சார்பாக சட்டத்தரணி ஸெலஸ்ரின் ஆஜராகியிருந்தார். வைத்தியர் அர்ச்சுனா ஊழல் மோசடிகளை தடுக்கும் முகமாகவே கடமை நேரத்தில் வைத்தியர்கள் வெளியே
 செல்வதனைத் தடுத்திருந்தார் எனவும்-
வைத்தியர்கள்
 கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றிவிட்டு பின்னர் மேலதிக நேரக் கடமை என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை சூறையாடுவதாகவும் அவர் தனது வாதத்தின் போது
 சுட்டிக்காட்டியிருந்தார்.
 இதன்போது இரு தரப்பு விவாதங்களையும் கவனத்தில் எடுத்த நீதிபதி, 5 வழக்குகளையும் எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்கு 
தவணையிட்டுருந்தார்.
 அதேநேரம் வைத்தியர் அர்ச்சுணா சாவகச்சேரி வைத்தியசாலையில் வைத்து தனது தொலைபேசி மற்றும் பணத்தை பறித்தமைக்காக வைத்தியர்கள் மீது தொடுத்த வழக்கும் குறித்த தினத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளமை
 என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 30 ஜூலை, 2024

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரிஸை ஆதரிக்கும் பிரபல எழுத்தாளர்

மும்பையில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான கமலா ஹாரிஸின் வேட்புமனுவை 
ஆமோதித்துள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நாட்டை சர்வாதிகாரத்திற்கு இழுப்பதைத் தடுக்கக்கூடிய நபர் அவர் என்று தான் நம்புவதாகக் தெரிவித்துள்ளார்.
பிரபல சட்டமியற்றுபவர்கள், எழுத்தாளர்கள், கொள்கை வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் உட்பட இந்திய-அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான 
முன்னணி பெயர்கள் கலந்துகொண்ட மெய்நிகர் ‘தெற்காசிய ஆண்கள் ஹாரிஸ்’ நிகழ்வின் போது ருஷ்டி 
அமெரிக்க துணை
 ஜனாதிபதி ஹாரிஸுக்கு தனது ஆதரவையும் ஒப்புதலையும் வழங்கினார்.
“இது ஒரு முக்கியமான தருணம். நான் பாம்பேயைச் சேர்ந்த 
பையன், வெள்ளை மாளிகைக்கு இந்தியப் பெண் போட்டியிடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
 மேலும் என் மனைவி ஆப்பிரிக்க-அமெரிக்கன், எனவே ஒரு கருப்பு மற்றும் இந்தியப் பெண் போட்டியிடுவதை நாங்கள் விரும்புகிறோம்” என்று ருஷ்டி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.