ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதிகள் காலம் தாழ்ந்தவை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாண சபைகள் தொடர்பில் வெளிப்படுத்தியுள்ள கரிசனைகள் காலந்தாழ்ந்தவையாகவே உள்ளதென்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன்
 தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பை அடுத்து 
மாகாண சபை தேர்தல் திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றுவதற்கும்ரூபவ் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு 
தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் மாகாண சபைகளை வினைத்திறனான முறையில் முன்னெடுப்பதற்கு ஏற்கனவே நான் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தேன்.
அப்போது திருத்தங்களை மேற்கொள்வதற்கான வரைவுகளையும் சமர்ப்பித்திருந்தேன். ஆனால் ஜனாதிபதி அதனை 
முன்னெடுப்பதற்கு தயாராக இல்லாத நிலையிலேயே இருந்தார். இந்த நிலையில் தற்போது மாகாண சபைகளுக்கான தேர்தலை முன்னெடுப்பதற்காக தேர்தல் திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றுவதற்கு 
இணங்கியுள்ளார்.
அதுமட்டுமன்றி இன்னமும் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு அவர் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கூறியதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வாக்குறுதி அளித்தபடி விடயங்களை 
முன்னெடுத்தால் சிறந்தது.
எனினும், அவர் அத்தகைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான காலத்தினை தவறவிட்டுள்ளார். இப்போது காலம் தாழ்த்தப்பட்டுவிட்டது. மேலும் அவர் அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றுவார் என்பதற்கும் எந்தவிதமான உத்தரவாதங்களும் இல்லை.
அதேநேரம், மாகாண சபைகளை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற சட்ட திருத்தங்கள் மீளப்பெற முடியாதவையாக இருக்க வேண்டும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். ஏனென்றால் கடந்த காலத்தில் மாகாண சபைகளுக்கான சட்டங்கள்
 மீளப் பறிக்கப்பட்டு விட்டன.
ஒற்றையாட்சிக் கட்டமைப்புள்ள இந்த நாட்டில் அதிகாரங்களை பறிப்பது தொடர்கதையாகவே உள்ளது.
1987ஆம் ஆண்டு மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர், கிராமசேவகர் ஆகியோரை நிர்வகிக்கும் அதிகாரம் மாகாண சபைக்கு
 காணப்பட்டாலும் 1992இல் ரணசிங்க பிரேமதாசவினால் மாற்றியமைக்கப்பட்டமையால் மாகாணங்கள் அந்த 
அதிகாரங்களை இழந்தன.
இதனால், முதலமைச்சராக நான் இருந்தகாலத்தில் மாவட்டங்களை நிர்வகிப்பதற்கு நெருக்கடியான சூழலுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது என்றார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.