சனி, 10 ஆகஸ்ட், 2024

நாட்டில் தேர்தலில் என்னதான் நடக்கும் நொந்து புண்ணாகப்போவது மக்கள் வாழ்வு மட்டுமே

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக அறிவித்துள்ளன.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக ஒருவர் களமிறக்கப்படும் முதலாவது
 சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்த நிலையில், மலையக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலிய மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜூம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தில், அவர்கள் மலையக தமிழ் சமூகத்தை கவனத்தில் கொள்ளாததை அடுத்தே, தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாக மயில்வாகனம் திலகராஜ், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் தமிழ் வேட்பாளர்கள் தனித்து ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்ட போதிலும், கணிசமான வாக்குகளை 
பெற முடியவில்லை. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் களம் கண்டுள்ள 
தமிழ் வேட்பாளர்கள் முன்னுள்ள வாய்ப்புகள் என்ன? 
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து
 தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் வகையில் கடந்த காலங்களில் பல சுற்று பேச்சுவார்த்தைகளை
 நடத்தியிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, ஜனாதிபதித் தேர்தலின் தமிழ் பொது வேட்பாளராக பா.அரிநேத்திரன் அறிவிக்கப்பட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பா.அரியநேத்திரன், 2004ம் ஆண்டு முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.
அதனைத் தொடர்ந்து, 2010ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை ஈட்டி, நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவானார். பா.அரியநேத்திரன் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவார் என்று 
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் 
தெரிவிக்கின்றார்.
தேர்தல் ஆணையகம் வேட்பாளர் நியமனங்கள் செய்யப்பட்டதன் பிறகு அதற்கான சின்னத்தை ஒதுக்கும். "அதுவரை என்ன சின்னம் என்பது எங்களுக்கு தெரியாது" என சுரேஷ் பிரேமசந்திரன்
 தெரிவிக்கின்றார்.
''தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வுகளை கொண்டு வருவதற்கான ஒரு நகர்வை ஏற்படுத்தும் முறையில் அந்த வெற்றியை 
தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என
 கருதுகின்றோம்.
தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான ஒன்றை சர்வதேச வெளிக்கு கொண்டு செல்லும் அளவில் இது மிகப்பெரிய உதவிகளை செய்யும்." என அவர் 
குறிப்பிடுகின்றார்.
தமிழ்த் தேசிய உணர்வை வெளிகாட்டுவதற்காகவே வேட்பாளராக களமிறங்குகின்றேனே தவிர, ஜனாதிபதியாவதற்கு அல்ல என்று தமிழ் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.அரியநேத்திரன் 
தெரிவிக்கின்றார்.
''எதிர் வருகின்ற 9வது ஜனாதிபதித் தேர்தலிலே வடகிழக்கில் இருந்து தமிழ்த் தேசிய உணர்வை வெளிகாட்டுவதற்கான ஒரு வேட்பாளராக என்னை நிறுத்தியுள்ளனர். நான் வெறும் அடையாளம். 
அதாவது தமிழ்த் தேசியத்தின் குறியீடாக நான் இருப்பேனே தவிர, ஸ்ரீலங்கா சோசலிஷ குடியரசின் ஜனாதிபதியாக வருவதற்கு
 அல்ல" என தெரிவித்தார். இனப் படுகொலை 
நிகழ்ந்ததிலிருந்து தமிழ் மக்கள் உரிமையற்ற இனமாக இருப்பதாக கூறிய அவர், தங்களுக்கான உரிமை கிடைக்க வேண்டும் என்பதை சர்வதேசத்திற்கும், ஸ்ரீலங்காவிற்கும் வலியுறுத்துகின்ற ஒரு அடையாளத்திற்காக மாத்திரமே தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரதான கட்சியாக விளங்கும் இலங்கை தமிழரசு கட்சி பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான இதுவரை தமது இறுதித் தீர்மானத்தை 
அறிவிக்கவில்லை.
இந்தநிலையில், பொது வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் ஓரிரு தினங்களில் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர், தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவை 
வழங்கியுள்ளனர். வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியானது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்கியுள்ளது.
மறுபுறம், தமிழ் பொது வேட்பாளர் அறிவிப்பில், மலையக தமிழர்களை கருத்திற் கொள்ளாததாலேயே, ஜனாதிபதித் தேர்தலில் தாம் களமிறங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் 
தெரிவிக்கின்றார்.
இலங்கையின் 70 ஆண்டு சுதந்திர வரலாற்றில் இறுதி 30 வருட காலம் வடகிழக்கு மாகாண மக்களின் பிரச்னை பேசப்பட்ட அளவிற்கு, மலையக தமிழர் பிரச்னை பேசப்படவில்லை என்று அவர் வலியுறுத்துகிறார். "தமிழ் பொது வேட்பாளர் என்ற கோஷம், மலையக தமிழரை
 உள்ளடக்கவில்லை என்பது அந்த பொது வேட்பாளர் கருத்துகளில் இருந்தே
 வெளிப்பட்டது. தமிழ் பொது வேட்பாளர் என பெயரை வைத்துக்கொள்கின்றார்களே தவிர, மலையக மக்கள் தொடர்பில் எதுவும் பேசவில்லை" என திலகராஜ்
 தெரிவித்தார்.
கொள்கை வகுப்பாளர்களும் இந்த மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ளவில்லை என்று அவர் கூறுகிறார். இந்த மக்களின் பிரச்னைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியே தான் போட்டியிடுவதாக கூறினார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் பலவும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால், தென் பகுதியிலுள்ள தமிழ் கட்சிகள், தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணப்பாட்டிற்கு ஆதரவை 
வழங்கவில்லை.
மலையகம் உள்ளிட்ட நாட்டின் தென் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தமிழ் கட்சிகள் ரணில் விக்ரமசிங்க
 மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாவதற்கான சாத்தியம் இல்லை என்ற நிலையில், வெற்றி பெறும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்கி, மக்களுக்கான உரிமையை வென்றெடுப்பதே காலத்திற்கு 
பொருத்தமானது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் பிபிசி தமிழிடம் கூறினார்.
இந்த காலத்திற்கு பொருத்தமற்ற நகர்வாவே, தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தான் பார்ப்பதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் 
தெரிவிக்கின்றார். தமிழர் தரப்பு அரசியலில் பேசும் தரப்பாக இருக்க வேண்டும். 
ஆனால் துரதிஷ்டவசமாக 30 வருட கால யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர், 2009ம் யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் முடிவடைந்தும். வடக்கு, கிழக்கு, மலையகத்தை மையப்படுத்தி
, தமிழர்கள் ஒருமித்த திசையிலே பேரம் பேசும் சக்தியை இழந்திருக்கின்றார்கள் என்ற நிலை கவலைக்குரிய ஒரு விடயம்" என்கிறார் உமாச்சந்திரா பிரகாஷ்.
தமிழர்களின் இருப்பு இலங்கையில் மிக முக்கியமான ஒரு விடயம் என்ற வகையில் காலத்தில் பொருத்தமற்ற ஒரு அரசியல் நகர்வாக பொது வேட்பாளர் நகர்வை பார்ப்பதாக அவர் கூறுகிறார். "இது,
 ஒட்டு மொத்த தமிழ் இனத்தினுடைய இருப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. 
தமிழர் தரப்பு தற்போது மிக புத்திசாலித்தனமாக சிந்தித்து, அரசியலில் எந்த பக்கமாக இருந்தாலும், வெற்றி கிடைக்கும் பக்கம் பேரம் பேசும் சக்தியாக இருந்து தங்களுடைய இருப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். உரிமையுடன் கூடிய இலக்கத்தை கொள்ள வேண்டும்." என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ்
 தெரிவிக்கின்றார்.
அத்துடன், இந்திய வம்சாவளித் தமிழர்களிடம், தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தில் உடன்பாடு கிடையாது என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவிக்கின்றார்.
தமிழர்களின் பலத்தை காண்பிப்பதற்கு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவர் களமிறங்குவது இந்த தருணத்தில் பொருத்தமற்றது என மூத்த ஊடகவியலாளர் கே.எம்.ரசூல்
 தெரிவிக்கின்றார்.
''இலங்கை தமிழர்கள் குறிப்பாக நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் விடயங்களில் தீர்க்கமான கட்டங்களில் தங்களின் வாக்குகளை பயன்படுத்தியிருக்கின்றார்கள். இந்த நிலையில், இம்முறை தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் வடக்கு, கிழக்கு, 
மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு 
களமிறங்கியிருந்தாலும், அவர் ஜனாதிபதியாவதற்கு எந்தளவு வாய்ப்புக்கள் இருக்கின்றது 
என்று கேட்டால், அதற்கு மிக தெளிவாக அவரால் ஜனாதிபதியாக
 முடியாது என திட்டவட்டமாக கூறிக்கொள்ள முடியும்" என்றார் ரசூல்.
தமிழ் மக்களின் தனித்துவத்தை அல்லது தமிழ் மக்களின் பலத்தை நிருபிப்பதற்கான தருணம் இதுவென எண்ணி அவர் களமிறங்கியிருந்தால், நிச்சயமாக இது அதற்கான தருணம் கிடையாது
 எனவும் அவர் கூறுகிறார். "காரணம், தமிழ் மக்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். 
அது நாடாளுமன்றத் தேர்தல் அல்லது மாகாண சபைத் தேர்தல்களாக இருக்கலாம். அந்த இடங்களில் தமிழர்களின் பலத்தை 
காட்ட வேண்டும். அதனூடாக உரிமைகளை
 பெற்றுக்கொள்வதற்கான
 வலுவை பெற முடியும். ஜனாதிபதித் தேர்தலில் அந்த பலத்தை காண்பிப்பது, அதற்கான தருணம் கிடையாது என நினைக்கின்றேன்" என மூத்த ஊடகவியலாளர் கே.எம்.ரசூல் தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா
 மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக வடக்கு மாகாணம் அமைந்துள்ளது. தேர்தல் காலப் பகுதியில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி 
ஆகிய மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, யாழ்ப்பாணம் மாவட்டம் எனவும், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு வன்னி மாவட்டம் எனவும் கருதப்பட்டு வாக்கு 
பதிவு இடம்பெறும்.
இந்த நிலையில், வட மாகாணத்தில் மாத்திரம் 8,99,268 வாக்குகள் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தரவுகள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாணத்தை பொருத்தவரை திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் திகாமடுல்ல (அம்பாறை) ஆகிய மூன்று மாவட்டங்கள் 
உள்ளடங்குகின்றன.
இந்த மூன்று மாவட்டங்களிலும் 13,21,043 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை தவிர, முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றனர்.
 குறிப்பிட்ட சில பகுதிகளில் சிங்களவர்களும் வாழ்ந்து வருகின்றனர். தென் பகுதியை பொருத்தவரை பெரும்பான்மை சிங்கள மக்களுடன் ஒன்றிணைந்து தமிழர்கள் வாழ்ந்து வருகின்றமையினால் தமிழர்கள் வாக்கு 
எண்ணிக்கையை சரியாக கணிப்பிட முடியவில்லை.
குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.