திங்கள், 15 ஜூலை, 2024

நாட்டில் ஜனாதிபதி தேர்தலிற்கான வேட்பு மனு திகதியை அறிவிக்க தயாராகும் தேர்தல்கள் ஆணைக்குழு

நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை இம்மாத இறுதியில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க
 தெரிவித்துள்ளார்.
 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை நாளை மறுதினம் (17) அரசியலமைப்பின் பிரகாரம் அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும் என அவர் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
 இம்மாத இறுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் திகதியை அறிவிப்பதன் மூலம் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு போதிய அவகாசம் கிடைக்கும் எனவும் அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் திகதியை விரைவில் அறிவிக்குமாறு எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் தேர்தல் கண்காணிப்புக் குழுவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. 
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு
 வந்து ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் திகதியை விரைவில் அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். எதிர்வரும்
 நாட்களில் ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தகூடிய வாக்காளர் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தவுள்ளதாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 எவ்வாறாயினும், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 17 மில்லியன் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெறுவார்கள் என 
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 17 வரை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 தேர்தல் ஆணையத்தின் தலைவர் ரத்நாயக்க, அரசாங்க அச்சுப்பொறியாளர், பொலிஸ் மா அதிபர், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினர் தேர்தலுக்குத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 14 ஜூலை, 2024

யாழில் சூரிய மின்னிணைப்பில் மோசடி ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள கோரிக்கை

யாழில் சூரியசக்தி மின்னிணைப்பு வழங்கலில் முறைகேடுகள் இடம்பெறுவது தொடர்ச்சியாக அவதானிக்க பட்டு வருகிறது. இது குறித்து ஜனாதிபதி செயலகம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை
 விடுத்துள்ளது.
 குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சூரியசக்தி மின்னிணைப்பு வழங்கலில் தொடர்ச்சி யான முறைகேடுகள் இடம்பெறுவதாக, ஜனாதிபதி செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டு
 செல்லப்பட்டதை தொடர்ந்தே, இது தொடர்பில் ஆராய்ந்து 
அறிக்கையிடுமாறு வலுசக்தி அமைச் சுக்கு உத்தரவு 
பிறப்பிக்கப்பட்டுள்ளது மேலும், யாழில் இயங்கும் பிராந்திய மின் இணைப்புப் பொறியியலாளர் காரியாலயத்தில் 
சூரியசக்தி இணைப்பு அனுமதிக்கான விண்ணப்பங்கள்
 சமர்ப்பிக்கப்படும்போது 
முறைகேடான விதத்தில்அனுமதிகள் வழங்கப்படுவதாகவும், மிக
 நீண்டகாலமாக விண்ணப்பித்தவர்களின் ஆயிரக்கணக்கான விண்ணப் பங்கள் வேண்டுமென்றே கிடப்பில் போடப் பட்டுள்ளன என்றும், 
இவை குறித்து
 மின்சாரசபை யின் பொது முகாமையா ளருக்கு முறைப்பாடுசெய்த வாடிக்கை யாளர்கள் பழிவாங்கப்படுவதாகவும் ஜனாதிபதியின் குறைகேள் அதிகாரிக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 இதனையடுத்தே குறித்த விடயம் தொடர் பில் சுயாதீன விசாரணைகளை மேற் கொண்டு, அறிக்கையிடுமாறு ஜனாதிப தியின் செயலாளரால் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தல் வைடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 13 ஜூலை, 2024

தமிழர் தாயாகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில்  தமிழர் தாயாகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று 
முன்னெடுக்கப்பட்டது.
 வவுனியா பிரதான தபால் நிலையத்திற்கு அருகில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டு 
வரும் போராட்டத்தின் 2700 நாளான இன்றையதினம் குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறும் எங்கே
 எங்கே உறவுகள் எங்கே, கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே என்று கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை
 என்பது குறிப்பிடத்தக்கதாகும்  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





வெள்ளி, 12 ஜூலை, 2024

பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பதிவான நிலநடுக்கங்கள்

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் சில நில நடுக்கங்கள் பதிவாகியுள்ளன. மாகாணத்தின் கரையோர
 பகுதிகளில் இவ்வாறு நிலநடுக்கங்கள் பதிவாகியதாக 
தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் குறித்த நிலநடுக்கங்கள் காரணமாக சுனாமி அபாயம் கிடையாது என அறிவிக்கப்பட்டது.
6.4 ரிச்டர் அளவில் முதலாவது நில அதிர்வு பதிவானதாக அமெரிக்க மற்றும் கனடிய பூமி அதிர்வு கண்காணிப்பு நிறுவனங்கள் 
அறிவித்துள்ளனர்.
முதல் நில அதிர்வு பதிவாகி 30 நிமிடங்களில் மேலும் ஒரு நில அதிர்வு பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நில அதிர்வு 4.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் தீவுப் பகுதியில் கரையோரங்களில் சில நில அதிர்வுகள் 
பதிவாகியுள்ளன.
நில அதிர்வு நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாக காலநிலை ஆயத்த மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் போவின் மா தெரிவித்துள்ளார்.
கனடாவில் வருடம் ஒன்றில் ஆயிரக்கணக்கான நில அதிர்வுகள் பதிவாகின்றன எனவும் அதில் அனேகமானவை பிரிட்டிஷ் கொலம்பியாவில் பதிவாகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
 அடிக்கடி நில அதிர்வு இடம் பெறும் பகுதிகளில் மக்கள் ஆயத்த நிலையில் இருப்பது உசிதமானது என அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 11 ஜூலை, 2024

இலங்கை அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள கலந்துரையாடலில் பங்கேற்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (12.07.2024) நடைபெறவுள்ள 5 ஆவது அமெரிக்க - இலங்கை பங்காண்மை கலந்துரையாடலில் இலங்கை சார்பில் வெளிவிவகார 
செயலாளர் அருணி விஜேவர்தன தலைமையிலான உயர்மட்டக்குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.
 இலங்கை - அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இன்றைய தினம் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலுக்கு 
இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சின் 
செயலாளர் அருணி விஜேவர்தனவும், அமெரிக்கா சார்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான பதில் செயலர் ஜோன் பாஸும் இணைத்தலைமை 
தாங்கவுள்ளனர்.
 இக்கலந்துரையாடலில் பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், காலநிலை மாற்றம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கல்வி மற்றும் கலாசார 
ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையிலான தொடர்புகள் என்பன உள்ளடங்கலாக இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
 அதேபோன்று இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தொடர்புகளை ஊக்குவித்தல், இருநாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கக்கூடிய துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளல், உலக
 அரங்கில் பொது அக்கறைக்குரிய விடயங்களைக் கையாள்வதில் ஒத்துழைப்பைப்பேணல் என்பன பற்றியும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
 இதில் அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்கவும், அமெரிக்காவிலுள்ள இலங்கைத்தூதரக அதிகாரிகளும் பங்கேற்பர்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 10 ஜூலை, 2024

அமெரிக்க காங்கிரஸில் ஈழத்தமிழர்களிற்கான அரசியல் தீர்வு அறிக்கை சமர்ப்பிப்பு

ஈழத்தமிழர்களிற்கு அரசியல் தீர்வை வழங்குவதற்காக சுதந்திரம் குறித்த சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என கோரும் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்திற்கு 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளன.
 2024 மே 15ம் திகதி அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு பரந்துபட்ட ஆதரவு காணப்படுகின்ற நிலையில் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அதற்கு ஆதரவை வெளியிட்டுள்ளன.
 இது தொடர்பான கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள 150க்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகள் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்தின் வரலாற்று சூழமைவையும் தமிழ் மக்களின்
 சுயநிர்ணய உரிமைக்கு தீர்வுகாணக்கூடிய அதன் சாத்தியப்பட்டாமையும் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அந்த தீர்மானத்தை வரவேற்றுள்ளன. இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடையும் தருணத்தில்
 இந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
 நல்லிணக்கம் பற்றி இலங்கை அரசாங்கம் பேசுகின்ற போதிலும் தமிழர் இனப்படுகொலையின் 15 வருட நினைவேந்தல் நிகழ்வின் போது இடம்பெற்ற சம்பவங்கள் நேர்மையான நீதி மற்றும் பொறுப்புக்கூறல்
 குறித்து அரசாங்கம் அரசியல் உறுதிப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளன என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
 இராணுவமயமாக்கல்,நிலஅபகரிப்பு,சித்திரவதைகள் தடுத்துவைத்தல் உட்பட ஏனைய மனித உரிமை மீறல்களிற்கு எதிராக தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராடுகின்றனர் எனவும் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
என்பது  குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 9 ஜூலை, 2024

நாட்டில் மன்னாரில் மீண்டும் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடி மக்கள் விசனம்

நாட்டில் மன்னார் பிரதான பாலத்தடி யில் சில வருடங்களாக காணப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் புதிதாக அமைக்க பட்டுள்ளமை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.  
கொழும்பு- அத்துருகிரிய பிரதேசத்தில், நேற்று (8.07.2024) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் பலர் 
காயமடைந்துள்ளனர்.  
எனினும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மன்னாரிற்கு சென்று தலைமன்னார் ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உள்ளதாக புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு 
இரகசிய தகவல் கிடைத்துள்ளதாக புலனாய்வு செய்திகள் 
கிடைத்துள்ளன.  
அதற்கு அமைவாக குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மன்னாருக்கு சென்று இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல சந்தர்ப்பங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் மன்னாருக்குச் செல்லும் பிரதான பாலத்தடியில் விசேட இராணுவ சோதனைச் சாவடி 
அமைக்கப்பட்டுள்ளது.  
வேறு மாவட்டங்களில் இருந்து மன்னாரிற்குள் நுழைகின்ற சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சோதனைக்கு உற்படுத்தப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 என்பது  குறிப்பிடத்தக்கது




Blogger இயக்குவது.