வியாழன், 11 ஜூலை, 2024

இலங்கை அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள கலந்துரையாடலில் பங்கேற்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (12.07.2024) நடைபெறவுள்ள 5 ஆவது அமெரிக்க - இலங்கை பங்காண்மை கலந்துரையாடலில் இலங்கை சார்பில் வெளிவிவகார 
செயலாளர் அருணி விஜேவர்தன தலைமையிலான உயர்மட்டக்குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.
 இலங்கை - அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இன்றைய தினம் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலுக்கு 
இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சின் 
செயலாளர் அருணி விஜேவர்தனவும், அமெரிக்கா சார்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான பதில் செயலர் ஜோன் பாஸும் இணைத்தலைமை 
தாங்கவுள்ளனர்.
 இக்கலந்துரையாடலில் பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், காலநிலை மாற்றம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கல்வி மற்றும் கலாசார 
ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையிலான தொடர்புகள் என்பன உள்ளடங்கலாக இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
 அதேபோன்று இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தொடர்புகளை ஊக்குவித்தல், இருநாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கக்கூடிய துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளல், உலக
 அரங்கில் பொது அக்கறைக்குரிய விடயங்களைக் கையாள்வதில் ஒத்துழைப்பைப்பேணல் என்பன பற்றியும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
 இதில் அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்கவும், அமெரிக்காவிலுள்ள இலங்கைத்தூதரக அதிகாரிகளும் பங்கேற்பர்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.