நாட்டில் மன்னார் பிரதான பாலத்தடி யில் சில வருடங்களாக காணப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் புதிதாக அமைக்க பட்டுள்ளமை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு- அத்துருகிரிய பிரதேசத்தில், நேற்று (8.07.2024) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் பலர்
காயமடைந்துள்ளனர்.
எனினும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மன்னாரிற்கு சென்று தலைமன்னார் ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உள்ளதாக புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு
இரகசிய தகவல் கிடைத்துள்ளதாக புலனாய்வு செய்திகள்
கிடைத்துள்ளன.
அதற்கு அமைவாக குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மன்னாருக்கு சென்று இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல சந்தர்ப்பங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் மன்னாருக்குச் செல்லும் பிரதான பாலத்தடியில் விசேட இராணுவ சோதனைச் சாவடி
அமைக்கப்பட்டுள்ளது.
வேறு மாவட்டங்களில் இருந்து மன்னாரிற்குள் நுழைகின்ற சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சோதனைக்கு உற்படுத்தப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக