செவ்வாய், 3 அக்டோபர், 2023

நாட்டில் அதிகரித்துள்ள போதை பழக்கவழக்கம் கிளி நொச்சியில் சில கிராமங்கள் சுற்றி வளைப்பு

கிளி நொச்சியில் செல்வா நகர், கிருஷ்ணா நகர், விநாயகபுரம் போன்ற கிராமங்கள் சுற்றி வளைப்புகள் நடத்தப்பட்டது.. இலங்கையில் போதைவஸ்துக்களின் ஆட்டம் பாராளுமன்றம் வரை பேசப்படும் ஒரு புற்று நோயாக மாறியுள்ளது.
கடல் வழியாலும், ஆகாய வழியாலும் பல நாடுகளில் இருந்து நாளுக்கு ஒரு புதுவித போதைவஸ்துக்கள் இலங்கையில் அறிமுகமாக்கப்படுகிறது. கஞ்சா, ஹெரோயின், ஐஸ் போதைகளை விற்பனை செய்வோரும் நுகருவோரும் அதிகரித்த வண்ணமே உள்ளனர்.
இது சிங்கள நாடுகளில் அதிகமாக பாவனையில் இருந்தாலும் தமிழ் பேசும் பகுதிகளில், 2009 இல் அறவே கிடையாத இப் போதைவஸ்துக்கள் 
இப்பொழுது சாதாரணமாக ஒரு குடிசைக் கைத்தொழில் ஆகி பாடசாலைகளையும், மாணவ, மாணவிகளையும் குறிவைத்து விற்க்கப்படுகிறது.
இந்த வியாபாரத்தை கணிசமாக சில பாதுகாப்பு அதிகாரிகளும் இலஞ்சத்துக்காக கண்டும் காணாமல் இருப்பதும் அதிலும் தமிழ் போலீசாரில் சிலர் இதனால் வருமானம் ஈட்டுவதாலும் அனைத்து பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கும் அவப் பெயரை உண்டுபடுத்துகிறது.
இதை நுணுக்கமாக அறிந்த சில தமிழ், சிங்கள, இஸ்லாமிய நேர்மையான அதிகாரிகள் ஒரு கூட்டாக இணைந்து ஜனாதிபதிவரை இப் போதைவஸ்த்து நாட்டையும் நாட்டின் எதிர்கால சந்ததியினரையும் சூறையாடுகிறது என எடுத்துக் கூறியுள்ளனர்.
இதை செவி மடுத்த ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்து எங்கெங்கு போதைப் பொருள் பாவனையில் உள்ளதோ அங்கங்கு இரகசிய தேடுதலை நடாத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்க்குள் போதைக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்புக்கள், சமூகம் மற்றும் துவேசமற்ற நாட்டின் நன்மை கருதும் மாணவர்களும் துப்பு துலக்கவும், நோட்டம் பார்க்கவும் ஈடுபடுத்த படுகிறார்களாம். இப்படைக்கும் காவற் துறைக்கும் தொடர்புகள் இல்லை.
ஆனால் இவர்கள் மக்களோடு மக்களாக இயங்கும் ஒரு படையாதலால் விரைவில் போதையை கட்டுப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
மீனவர்கள், வெளி நாட்டவர்கள் தங்கும் விடுதிகளில் வேலை செய்பவர், பாடசாலையில் வேலை செய்யும் ஆசிரியர்கள் சிலர், இக்குழுவோடு இணைந்து கடமையாறுகிறார்கள் எனவும் கூறப்படுகிறது
இவ்வகையில் எமக்கு பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி, கிளிநொச்சியில் 55 ஆம் கட்டை, கிருஷ்ணா நகர், செல்வநகர், விநாயகபுரம் போன்ற இடங்களே போதை வஸ்த்தின் ஆணிவேராக இருக்கிறது என்பதும் மக்களால் கூறப்படுகிறது.
இங்கே மாலையில் சில ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர் சில பாதுகாப்புப் படைகளுக்கே போதைவஸ்த்தை வினையோகிப்பதாக ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி கூறுகிறார்.
இப்பொழுது கிளிநொச்சியில் நான்கு இடங்களில் கண்டு பிடிக்க முடியாத அழவில் இரகசிய துப்புத் துலக்கும் படை முற்றுகையிட்டுள்ளதாம் விரைவில் கணிசமான அழவில் போதை வஸ்து கலாச்சாரம் முடிவுக்கு வருமென இப்படை உறுதி கூறியிருக்கிறது.
ரணில் அரசு தமது ஆட்சியை தக்க வைக்க போதை ஒழித்து சிங்கபூரை போல கொண்டு வரவேண்டுமென காய் நகர்த்துகிறதாம்.
அதனை மனதில் வைத்தே சில தினங்களின் முன்னர் 
நான் விரைவில் இலங்கையை சிங்கப்பூர் போல ஆக்குவேன் என கூறியது குறிப்பிடத்தக்கது.
எது எதுவாக இருப்பினும் இலங்கையில் மட்டுமல்ல உலகிலேயே மதுபானம் உட்பட எவ்வித போதைப் பொருளும் இருக்கக்கூடாது எனவும், ஆயுதங்கள் நாடுகளை ஆழக்கூடாது எனவும் பல பொது நல விரும்பிகள் 
கூறுகின்றனர்.
அதுவே எமது லங்கா4 ஊடகமும் விரும்புகிறது.,தமிழர்களின் எதிர்காலம், இலங்கையின் எதிர்காலம், மும்மத ஒற்றுமை, தமிழ் சிங்கள ஒறைக்கும், உலக அமைதிக்கும், சமாதானத்துக்கும் ஓங்கி குரல் கொடுப்பதோடு நிற்க்காமல் வரும் காலங்களில் வறியவர்களின் வாழ்வுக்கும், இழைஞர், யுவதிகளின் மேம்பாட்டுக்கும் முதுகெலும்பாக இருப்போம்.
எனக்கூறி உள்ளனர் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.