செவ்வாய், 17 அக்டோபர், 2023

நாட்டில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஆபத்து பகுதிகளை கண்டறிய ஆய்வு

நாட்டில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மண்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்படும் ஏனைய இடங்களைக் கண்டறியும் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார 
சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ்.வீரகோன்
 தெரிவித்துள்ளார்.
 பாதுகாப்பு அமைச்சின் கீழ் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் பங்கேற்கும் செயற்திட்டத்தின் ஊடாக அபாயகரமான இடங்களை கண்காணித்து அவற்றுக்கு விரைவான
 தீர்வுகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்
 குறிப்பிட்டுள்ளார்.
 இதேவேளை, மண்மேடு சரிந்து வீழ்ந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இமதுவ மற்றும் பின்னதுவ பகுதிகள் குறித்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையின் இறுதி முடிவு கிடைத்த பின்னர்
 போக்குவரத்துக்கு முழுமையாக திறக்கப்படும் என வீதி 
அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ்.வீரகோன் தெரிவித்தார்.என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.