புதன், 11 அக்டோபர், 2023

பாிஸில் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம் தடை செய்யப்பட்டது

பிரான்ஸின் பாிஸில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இரண்டு ஆர்ப்பாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பரிஸ் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
 நாளை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு Place de La République சதுக்கத்தில் இருந்து இரண்டு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், ஹமாஸ் அமைப்பினருக்கு 
ஆதரவாகவும் இடம்பெற இருந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பரிஸ் காவல்துறை தலைமையகம் தடை விதித்துள்ளது.
 முன்னதாக, லியோன், மார்செய் போன்ற நகரங்களிலும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை 
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.