எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி
மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை
உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கல்வி அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உயர் நீதிமன்றம் கால அவகாசம்
வழங்கியுள்ளது.
இது தொடர்பான மனு நேற்று (27) முர்து பெர்னாண்டோ, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய
மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில்
அழைக்கப்பட்டது.
இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் குறித்த ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக