இலங்கையில் முதன்முறையக அரியவகை ஆழ்கடல் மீன் இனம் ஒன்று பிடிபட்டுள்ளது. புத்தளம், நைனாமடு பகுதியைச் சேர்ந்த
மீனவர்களின் வலையில் குறித்த அரியவகை
மீன் சிக்கியுள்ளது.
இதுபோன்ற அரிய வகை மீனைப் பார்ப்பது இதுவே முதல் முறை எனவும், துறைமுகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் துறைமுக கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
முயல் மீன் என அழைக்கப்படும் இந்த வகை மீன்கள் உட்கொள்வதற்கு உகந்தவை அல்லவென அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா, கொலம்பியா, பிரான்ஸ், காம்பியா, ஐஸ்லாந்து, மொரிட்டானியா, மெக்சிகோ, நமீபியா, செனகல், தென்னாப்பிரிக்கா, சுரினாம்
மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படுவதாக தேசிய நீர்வள
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NARA)
தெரிவித்துள்ளது.
இந்த மீன் Longnose chimaeras குடும்பத்தை ஒத்த இனமாகும் மற்றும் மிதமான கடல்களில் 1,500 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் வாழ்கிறது. 2018 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின் பின்னர் இந்த வகை மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நாரா தெரிவித்துள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது
![]()




0 கருத்துகள்:
கருத்துரையிடுக