ஞாயிறு, 22 அக்டோபர், 2023

தேசிய ஜனசபை நிகழ்ச்சித்திட்டம் கிளிநொச்சியில் அங்குரார்ப்பணம்

நாடளாவிய ரீதியாக தேசிய ஜனசபை செயலகத்தின் ஏற்பாட்டில் தேசிய ஜனசபை நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னோடி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.  
அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய ஜனசபை நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட அம்பாள்குளம் கிராம சேவகர் பிரிவில் 21-10-2023.,அன்று  
நடைபெற்றது.  
குறித்த நிகழ்வு கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்தில் பி.ப 2.30மணிக்கு கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு நிகழ்விடத்திற்கு அழைத்துவரப்பட்டதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டது. தொடர்ந்து கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன்  ஜனசபை 
முன்னோடி வேலைத் திட்டத்தின் நோக்கம் தொடர்பாக விளக்கமளித்தார். தொடர்ந்து தேசிய ஜனசபை செயலாளரின் உரை, 
முன்னாள் சபாநாயகர் கௌரவ கருஜயசூரியவின் 
வாழ்த்துச்செய்தி, பணிப்பாளர் சட்டத்தரணி அகலங்க ஹெட்டியாராச்சியின் ஜனசபை முறை தொடர்பான தெளிவூட்டல் ஆகியன காணொளி ஊடாக இடம்பெற்றன. 
தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனின் உரை இடம்பெற்றது. தொடர்ந்து கரைச்சி பிரதேச 
செயலகத்திற்குட்பட்ட அம்பாள்குளம் கிராம சேவகர் பிரிவிற்கான 25 உறுப்பினர்களைக் கொண்ட ஜனசபை மக்களால் 
தெரிவு செய்யப்பட்டது.  இதனைத் தொடர்ந்து செயற்குழுவின் முன்மொழிவு வேலைத் திட்டங்கள் தொடர்பான விடயங்கள் 
கலந்துரையாடப்பட்டன.  
ஜனசபை முறை என்பது கிராமம் ஒன்றில் உள்ள மக்கள் தமது கிராமத்தில் எத்தகைய அபிவிருத்தி இடம்பெற வேண்டுமென தாமே 
தீர்மானிப்பதற்கு வாய்ப்பு இடம்பெற வேண்டுமென வழங்கும் ஒரு முறையியல் ஆகும்.  
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் கி.ஸ்ரீபாஸ்கரன்,உதவித்திட்டமிடல் 
பணிப்பாளர் அ.கேதீஸ்வரன்,ரவீந்திர டீ சில்வா சிவில் சமூக செயற்பாட்டாளர்,வடமாகாணம், S.M.ரசீன் ஜனசபை 
செயலக தகவல் உத்தியோகத்தர்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,கிராம அலுவலர்,கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.