வெள்ளி, 6 அக்டோபர், 2023

கடந்த ஆண்டு உயிரிழந்த மகாராணியை கொல்ல சதிதீட்டிய சீக்கியருக்கு 9 ஆண்டு தண்டனை

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். இவர் உயிருடன் இருக்கும் போது அவரை கொல்ல முயன்றதாக இங்கிலாந்து வாழ் சீக்கியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். 
அவரது பெயர் ஜஸ்வந்த் சிங் சைலு. 21 வயதான இவர் கடந்த 2021- ம் ஆண்டு இங்கிலாந்து அரண்மனையில் நுழைய முயற்சி செய்தார்.
 முகத்தில் முகமூடி அணிந்த நிலையில் ஊடுருவிய அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாதுகாப்புபடை வீரர்கள்
 மடக்கி பிடித்தனர்
விசாரணையில் ஜஸ்வந்த் சிங் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கொல்லும் நோக்கத்தில் வந்ததாக திடுக்கிடும் தகவலை 
தெரிவித்தார்.
1919-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழி வாங்கும் வகையில் ராணியை கொல்ல வந்தாக தெரிவித்தார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. 
அவருக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. இங்கிலாந்து போலீசார் இச்சம்பவம் தொடர்பாக ஜஸ்வந்த் சிங் சைலுவை 
கைது செய்தனர். 
இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜஸ்வந்த் சிங் சைலுவுக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதித்து தீர்ப்பு கூறினார். என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.