வியாழன், 18 மே, 2023

பிறந்த நாளுக்கு அனுப்பிய 'Surprise Gift கொடுக்கச் சென்ற இளைனுடன் யாழில் குடும்பப் பெண் மாயம்

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டில் உள்ள  கணவர், மனைவியின் பிறந்த நாளுக்கு அனுப்பிய  'Surprise Gift கொடுக்கச் சென்ற இளைனுடன் குடும்பப் பெண் ஒருவர் மாயமான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக 
தெரியவருகின்றது.
வலிகாமத்தை சேர்ந்த ஒருவர் தென்மராட்சியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து சிறிது காலத்தில் ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்றுள்ளார். இதையடுத்து மனைவியின் பிறந்த நாளுக்கு 
'சப்பிறைஸ்' கொடுக்க விரும்பியுள்ளார்.இதற்கான தேடலில் பேஸ்புக் ஊடாக வடமராட்சியை சேர்ந்த 'Surprise Gift Delivery' செய்யும் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.
பின்னர் ஒரு தொகை பணத்தை அவருக்கு அனுப்பிவைத்து, மனைவியின் பிறந்த நாள் அன்று சப்றைஸ்   கொடுக்குமாறு   இளைஞனிடம்  கணவர்  தெரிவித்ததையடுத்து, இளைஞர் அங்கு  
சென்றுள்ளார்.
அதன் பின்னர்   'Surprise Gift Delivery' செய்ய வந்த இளைஞனுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  இரண்டு மாதங்களின் பின் கணவன் அனுப்பிய பணத்தில் சீட்டு போட்ட காசுடன் குறித்த இளைஞனுடன் சென்ற நிலையில், நண்பரை நம்பி  மனைவிக்கு 'Surprise Gift  கொடுக்க நினைத்த  கணவர் கடைசியில் மனைவியை இழந்ததுதான் மிச்சம்.
என்பது குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.