சிரியாவின் போர் மேகம் சூழலும் முன்பு அந்நாட்டில் வெற்றிகரமான ஒரு வங்கி நிர்வாகியாக சன்டல் மசூத் இருந்தார்.
இதனையடுத்து, சிரியாவில் இருந்து வெளியேற அவர் ஈராக் தஞ்சமடைந்து ஆஸ்திரேலியாவில் மீள்குடியேறினார்.
ஆஸ்திரேலியாவில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றும் முன்பு அவர் சுத்தம் செய்தல், கடை உதவியாளர் என சிறுசிறு வேலைகளில் வாழ்க்கையை கடத்தி வேண்டியிருந்தது.
“ஆஸ்திரேலியாவுக்கு வந்த பொழுது வேலைத் தேடுவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. எனக்கு என்ன விதமான தகுதியிருக்கிறது என நிறுவனங்களுக்கு எந்த கவலையும் இல்லை.
ஆஸ்திரேலியாவின் பணி சூழலில் எனக்கு என்ன அனுபவம் உள்ளது என்பதையே நிறுவனங்கள் கருத்தில் கொண்டன,” என்கிறார்
சன்டல் மசூத்.
சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வொன்றில், அகதிகள் குறித்த ஊடகம், அரசாங்கத்தின் பிம்பங்களே இந்த பாரபட்சம், தவறான புரிதல்களுக்கு காரணம் என ஆய்வில் நிறுவனங்கள்
கூறியுள்ளன.
மேலும், ஆங்கில மொழி சிக்கல்களுக்கு அகதிகளை பணிக்கு அமர்த்துவதில் சிக்கல்களாக உள்ளதாக சில நிறுவனங்கள்
தெரிவித்துள்ளன.
அதே சமயம், நிறுவனங்களின் எண்ணங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் கணிசமான இடைவெளி உள்ளது என இந்த ஆய்வு ஆசிரியர் கூறியுள்ளார்
. என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக