கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் நபர் ஒருவர் போதைப்பொருள்களை விற்கும் கடையைத் திறந்துள்ளார். இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
51 வயது Jerry Martin என்பவர் ஒரு வாகனத்தினுள் கடையை அமைத்திருந்தார். அதில் கொக்கெய்ன், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்கப்பட்டன. கடையைத் திறந்த மறுநாள் அவர்
கைது செய்யப்பட்டார்.
வான்கூவர் (Vancouver) நகரில் உள்ள குடியிருப்புப் பேட்டையில் அவர் வாகனத்தை நிறுத்தி போதைப்பொருள்களை விற்றுக்கொண்டிருந்தார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் சிறிய அளவுகளில்
போதைப்பொருள்களை வைத்திருப்பது குற்றமற்றச் செயல் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் அந்தக் கடையைத் திறக்கத் திட்டமிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக