திங்கள், 1 மே, 2023

நாட்டில் இனப்பிரச்சினைக்கு இந்த வருடத்தில் இணக்கப்பாடு எட்டப்படும்: ஜனாதிபதி எதிர்பார்ப்பு

2048 ஆம் ஆண்டை இலங்கையின் அபிவிருத்தி ஆண்டாக மாற்றுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
 தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் தொழில்நுட்பத்தினூடாக 2048 ஜயகமு என்ற தொனிப்பொருளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில்
 கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 பாரம்பரிய அரசியலில் இருந்து விடுபட்டு நாட்டை நோக்கி புதிய பாதையில் செல்லும் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி மாற்றப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய திரு.ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண இந்த வருடத்தில் இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
என்பது  குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.