வியாழன், 4 மே, 2023

மட்டக்களப்பு மீனவர்களுக்கு வெசாக் தினத்தை முன்னிட்டு அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள பகுதிகளில் இன்று முதல் 3 தினங்களுக்கு இறைச்சி கடைகளுடன் மீன் கடைகளையும் மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மீனவர்கள் அதிருப்தி 
தெரிவித்துள்ளனர்
வெசாக் தினத்தை முன்னிட்டு வழமையாக இறைச்சிக் கடைகள் மட்டுமே மூடப்படுவது வழக்கம், இருப்பினும் தற்போது மீன்கடையினையும் மூடுமாறு பணித்துள்ளமையால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தாங்கள் 3 தினங்களுக்குரிய மீன்களை சேமித்து வைத்திருந்த நிலையில் மாநகர சபையின் அறிவிப்பானது தமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.மதிவண்ணனிடம் கேட்டபோது, வழமையாக இறைச்சிக் கடைகளை வெசாக் தினத்தில் மூடுவதற்கான அறிவுறுத்தலை வழங்குவதாகவும் இந்த முறை அரசாங்கம் புதிதாக மீன்கடைகளையும் மூடுமாறு 
பணித்துள்ளதாகவும் இது தொடர்பில் மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.