புதன், 24 மே, 2023

யாழ் தையிட்டி விகாரையை தமிழர்களிடம் ஒப்படைக்க தயார்: பிரபல தேரர் அதிரடி

நாட்டிலேயே தமிழ் பௌத்தர்களும் இருந்தார்கள் என்ற வரலாறுகள் இருப்பதாக பொகவந்தலாவ ராகுல தேரர் 
தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் 
தெரிவிக்கையில்,
திஸ்ஸ விகாரை ஒரு சிறிய விகாரையாக அந்த காலத்திலே இருந்திருக்கலாம். இப்பொழுது அந்த விகாரையை பெரிதாக கட்டியிருக்கிறார்கள். அந்த விகாரை கட்டப்பட்ட இடத்திற்கு சொந்தக்காரர்கள் இருக்கின்றார்கள் என கூறியிருக்கிறார்கள்.
இருப்பினும் எங்களுக்கு சரிவர தெரியவில்லை. அவர்களோடு நாங்கள் அமர்ந்து பேச தயாராக இருக்கின்றோம். அன்பு உறவுகளே வாருங்கள், உங்கள் ஆவணங்களோடு. நாங்கள் இதை சட்ட ரீதியாக ஒப்படைப்போம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்திலே தமிழ் பௌத்தர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வாருங்கள். நாங்கள் ஒரு பரிபாலன சபையை அமைத்து அந்த விகாரையை உங்கள் கையிலே
 ஒப்படைக்கிறோம்.
நாங்களும் வருகின்றோம். அதன்பிறகு அந்த விகாரை பொது மக்கள் கையில் ஒப்படைக்கப்படும். தமிழ் பேசுகின்ற அனைத்து உறவுகளும் சென்று அந்த இடத்திலே உங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொள்ளலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.