கிளிநொச்சி கோனாவில் தமிழ் வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மூன்று மாணவர்களுக்கு பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை ஆசிரியர் ஒருவர் வழங்க மறுத்ததால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வலயக்கல்விப் பணிமணையில்
முறையிட்டுள்ளனர்.
சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் பாடசாலைகளில் வழங்கப்பட்டு வரும் நிலையில் நேற்று கிளிநொச்சி கோணாவில் தமிழ் வித்தியாலயத்தில் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள்
வழங்கப்பட்டுள்ளன.
இதில் குறித்த பாடசாலையில் கல்வி கற்று வரும் மூன்று மாணவர்களுக்கான அனுமதியட்டைகளை ஆசிரியர் ஒருவர் வழங்க
மறுத்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்திற்குச் சென்று முறைப்பாடளித்தனர்.
குறித்த மூன்று மாணவர்களும் வறுமைக்கோட்டின் கீழுள்ள குடும்பகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக