இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி ஒருவரை புகையிரத பிரதி பொது முகாமையாளர் பதவிக்கு நியமித்தமைக்கு எதிராக தொழிற்சங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர
தெரிவித்துள்ளார்.
அந்த பதவிக்கு குறித்த அதிகாரியை நியமிக்க வேண்டாம் என தொடர்ச்சியாக தெரிவித்தும் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை எனவும் தொழிற்சங்கத்தின் நிறைவேற்று சபை இந்த திடீர் பணிப்பகிஷ்கரிப்பு தீர்மானத்தை எடுத்ததாகவும் மேற்படி செயலாளர்
குறிப்பிடுகின்றார்.
அதன்படி இன்று நள்ளிரவு முதல் அனைத்து நிலைய பொறுப்பதிகாரிகளும் சேவையில் இருந்து வெளியேறுவார்கள் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக