வெள்ளி, 12 மே, 2023

புதிய தலைமை செயல் அதிகாரியாக டுவிட்டர் நிறுவனத்தின் லிண்டா யாக்கரினோ நியமனம்

டுவிட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க் தனது சமூக வலைதள நிறுவனத்திற்கு புதிய தலைமை செயல் அதிகாரியை நியமனம் செய்து விட்டதாக அறிவித்து இருந்தார். 
மேலும் புதிய சிஇஒ பெண் என்று மட்டும் கூறி, அவர் யார் என்பது பற்றி எந்த தகவலும் வழங்கவில்லை. இதைத் தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ என்று கூறி ஏராளமான தகவல்கள் வெளியாகி வந்தன. 
அந்த வரிசையில், இணையத்தில் வெளியான தகவல்களை உண்மையாக்கும் விதமாக டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ என்று எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக 
அறிவித்து இருக்கிறார்.
 "லிண்டா யாக்கரினோவை டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். லிண்டா யாக்கரினோ வியாபார பணிகளில் கவனம் செலுத்துவார். நான் பிராடக்ட் டிசைன் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் பிரிவில் 
கவனம் செலுத்த இருக்கிறேன்." "இந்த தளத்தை X-ஆக, எல்லாவற்றுக்குமான செயலியாக மாற்றும் நோக்கில் லிண்டாவுடன் இணைந்து பணியாற்ற இருப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்," என்று எலான் மஸ்க் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.