புதன், 31 மே, 2023

ஞாயிற்றுக்கிழமைகளில் னியார் வகுப்புகளுக்கு யாழில் தடை!!!

யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் தடைசெய்யப்பட்டு அதில் பங்குபற்றும் மாணவர்களை ஏனைய நடவடிக்கைகளில் பங்குபற்ற வைக்கப்படும் என யாழ்.மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.யாழ் இந்து வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட செயலாளர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர்களை கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாவதை...

செவ்வாய், 30 மே, 2023

நாட்டில் பேலியகொடை மீன் சந்தையில் அதிகரித்த கோழி இறைச்சி, மீன் , முட்டை விலைகள்

இலங்கை சந்தையில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.1000 – 1100 ரூபாய் வரை இருந்த கோழி இறைச்சியின் விலை திடீரென 1500 – 1600 ரூபாய் வரை உயர்ந்துள்ளன. இதனுடன் சந்தையில் மீன் விலையும் அதிகரித்துள்ளது.அதன்படி பேலியகொடை மீன் சந்தையில் கெலவல்ல 1900 ரூபாவிற்கும் பலயா 1400 ரூபாவிற்கும்...

திங்கள், 29 மே, 2023

சேலம் நகரரில் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு 1000 ரூபாய் அபராதம்

ஹெல்மட் அணிந்து காரை ஓட்டவில்லை எனக்கூறி சேலம் நகர போக்குவரத்து காவல் துறையினர் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே டூவீலர் மெக்கானிக்கான வெற்றிவேலின் செல்போன் எண்ணிற்கு.28-05-2023. அன்று குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.அதில், சேலம் சாலையில் காரில் செல்லும் போது, ஹெல்மெட் அணியாததால் ஆயிரம் ரூபாய் அபராதம்...

ஞாயிறு, 28 மே, 2023

ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறியில் மீண்டும் இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது.எனினும், இம்முறை இந்த அமர்வின்போது இலங்கைக்கு அழுத்தம் குறைவாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.நிகழ்ச்சி நிரல்களின்படி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் டர்க், 19ஆம் திகதி பிற்பகலில் இலங்கை பற்றிய வாய்மொழி அறிவிப்பை வழங்குவார்.அன்றைய...

சனி, 27 மே, 2023

ஒமிக்ரோன் திரிபின் புதிய கொரோனா அலையால் :சீனாவில் 6.5 இலட்சம் பேர் பாதிப்பு

சீனா முழுவதும் கடந்த ஏப்ரல் இறுதியில் தொடங்கி  ஒமிக்ரோன் திரிபின் புதிய XBB வகை கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது.தற்போது வாரத்துக்கு 4 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகி வருகின்றனர்.வரும் ஜூன் மாதத்தில் சீனாவில் கொரோனா தொற்று உச்சத்தை அடையும் எனவும் வாரத்துக்கு 6.5 இலட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள்...

வெள்ளி, 26 மே, 2023

இலங்கை இளைஞர்களை ஏமாற்றி வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த இரு பெண்கள் கைது

இளைஞர்களை ஏமாற்றி பணம் மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவுஸ்திரேலியாவில் தொழிற்சாலை ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பதுளை பிரதேச இளைஞர்களிடம் பணம் பெற்ற பதுளை, தெமோதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வு அதிகாரிகளால்.26-05-2023. இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.  சந்தேகநபர்கள்...

வியாழன், 25 மே, 2023

நாட்டில் மாணவர்களுக்கு பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் வழங்க மறுப்பு

கிளிநொச்சி கோனாவில் தமிழ் வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மூன்று மாணவர்களுக்கு பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை ஆசிரியர் ஒருவர் வழங்க மறுத்ததால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வலயக்கல்விப் பணிமணையில் முறையிட்டுள்ளனர்.சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் பாடசாலைகளில் வழங்கப்பட்டு வரும் நிலையில் நேற்று கிளிநொச்சி...

புதன், 24 மே, 2023

யாழ் தையிட்டி விகாரையை தமிழர்களிடம் ஒப்படைக்க தயார்: பிரபல தேரர் அதிரடி

நாட்டிலேயே தமிழ் பௌத்தர்களும் இருந்தார்கள் என்ற வரலாறுகள் இருப்பதாக பொகவந்தலாவ ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,திஸ்ஸ விகாரை ஒரு சிறிய விகாரையாக அந்த காலத்திலே இருந்திருக்கலாம். இப்பொழுது அந்த விகாரையை பெரிதாக கட்டியிருக்கிறார்கள். அந்த விகாரை கட்டப்பட்ட...

செவ்வாய், 23 மே, 2023

வேலைக்கு அகதிகளை அமர்த்த தயக்கம் காட்டும் நிறுவனங்கள்

சிரியாவின் போர் மேகம் சூழலும் முன்பு அந்நாட்டில் வெற்றிகரமான ஒரு வங்கி நிர்வாகியாக சன்டல் மசூத் இருந்தார்.இதனையடுத்து, சிரியாவில் இருந்து வெளியேற அவர் ஈராக் தஞ்சமடைந்து ஆஸ்திரேலியாவில் மீள்குடியேறினார்.ஆஸ்திரேலியாவில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றும் முன்பு அவர் சுத்தம் செய்தல், கடை உதவியாளர் என சிறுசிறு வேலைகளில் வாழ்க்கையை கடத்தி வேண்டியிருந்தது.“ஆஸ்திரேலியாவுக்கு...

திங்கள், 22 மே, 2023

யாழ் வசாவிளானில் மாணவியிடம் அங்க சேட்டை விட்ட இராணுவ சிப்பாய் நையப்புடைப்பு

யாழ் வசாவிளான் பகுதியில் வீதியால் சென்ற பாடசாலை மாணவியிடம் அங்க சேஷ்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயை அப்பகுதிமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.இன்று திங்கட்கிழமை மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றநிலையில் சம்பவம் தொடர்பில் பலாலிப் பொலிஸார் மற்றும் இராணுவப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.தனிமையில் சென்ற பாடசாலை மாணவியை பின்தொடர்ந்த...

ஞாயிறு, 21 மே, 2023

இலங்கை மேல்மாகாணத்தில் டெங்குவை கட்டுப்படுத்த ட்ரோன் கேமராக்கள்

மேல்மாகாணத்தில் கள உத்தியோகத்தர்களால் சென்றடைய முடியாத உயரமான கட்டிடங்களை ஆளில்லா கமெராக்கள் மூலம் ஆய்வு செய்யும் நடவடிக்கை 20-05-2023.அன்று  முன்னெடுக்கப்பட்டது. மேல் மாகாண பூச்சியியல் நிபுணர் ஆயிஷா சரத்சந்திர கூறுகையில், ட்ரோன் கேமராக்கள் மூலம் நுளம்பு குடம்பிகள் பெருகக்கூடிய இடங்களுக்கு காற்றில் இருந்து இரசாயனங்கள் தெளிக்கப்பட்டுள்ளன. டெங்கு...

சனி, 20 மே, 2023

இலங்கையில் டெங்கு காய்ச்சலின் நாளாந்த விகிதம் ஆபத்தான நிலையை எட்டுகிறது

நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 300 முதல் 400 வரை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் வாரங்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளரான வைத்தியர் நளின் ஆரியரத்ன எச்சரித்துள்ளார்.டெங்கு நோயின் அபாயகரமான அதிகரிப்பு குறித்து மக்கள் விழிப்புடன்...

வெள்ளி, 19 மே, 2023

இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகள் நீக்கம்

புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது.மே மாதம் 23ஆம் தேதியிலிருந்து ரூ.2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.2018-19 ஆம் ஆண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும்...

வியாழன், 18 மே, 2023

பிறந்த நாளுக்கு அனுப்பிய 'Surprise Gift கொடுக்கச் சென்ற இளைனுடன் யாழில் குடும்பப் பெண் மாயம்

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டில் உள்ள  கணவர், மனைவியின் பிறந்த நாளுக்கு அனுப்பிய  'Surprise Gift கொடுக்கச் சென்ற இளைனுடன் குடும்பப் பெண் ஒருவர் மாயமான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.வலிகாமத்தை சேர்ந்த ஒருவர் தென்மராட்சியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து சிறிது காலத்தில் ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்றுள்ளார். இதையடுத்து மனைவியின்...

புதன், 17 மே, 2023

நாட்டில் பாடசாலை மாணவனின் ஒற்றை காலணியை பறித்துச் சென்ற திருடன்

துவிச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த பன்னிரெண்டு வயது மாணவனின் காலணியை வலுக்கட்டாயமாக பறித்துச் சென்றுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.அங்குருவத்தோட்ட பொலிஸ் எல்லைக்குட்பட்ட தொம்பகொட பாடசாலையில் 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் நேற்று காலை தனது வீட்டிலிருந்து பாடசாலைக்கு...

செவ்வாய், 16 மே, 2023

நாட்டில் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் INS Batti Malv என்ற கப்பல்

இந்திய கடற்படையின் ‘INS Batti Malv’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு.16-05-2023. இன்று .திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஐ 101 பேர் கொண்ட பணியாளர்களைக் கொண்ட 46 மீட்டர் நீளமுள்ள கப்பலாகும். கப்பல் இலங்கையில் இருக்கும் காலத்தில், இரு கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படையால்...

திங்கள், 15 மே, 2023

இலங்கையில் இன்று முதல் அரசு ஊழியர்களுக்கு கைரேகை வருகை முறை கட்டாயம்

அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் கைரேகை வருகையை குறிக்கும் கைரேகை இயந்திரத்தைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான சுற்றறிக்கை மே 12 ஆம் திகதி பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே.டி.யின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது.  கோவிட் தொற்றுநோய் நிலைமையின் விளைவாக...

ஞாயிறு, 14 மே, 2023

மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க அமைச்சரவை பத்திரம்

மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதற்கான அவதானிப்புகள் அழைக்கப்பட்டு, அவதானிப்புகளைப் பெற்ற பின்னர், சட்ட வரைவுகளைத் தயாரிப்பதற்கு வழியமைக்கப்படவுள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஆயுர்வேத மருந்துகள்...

சனி, 13 மே, 2023

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் சீமெந்து விலை குறைப்பு

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலையை குறைக்க சீமெந்து மொத்த விற்பனையாளர் தீர்மானித்துள்ளனர்.அதன்படி, 50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து பொதியின் விலையை 150 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய,தற்போது 2750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் சீமெந்து பொதி 2,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.  என்பது...

வெள்ளி, 12 மே, 2023

புதிய தலைமை செயல் அதிகாரியாக டுவிட்டர் நிறுவனத்தின் லிண்டா யாக்கரினோ நியமனம்

டுவிட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க் தனது சமூக வலைதள நிறுவனத்திற்கு புதிய தலைமை செயல் அதிகாரியை நியமனம் செய்து விட்டதாக அறிவித்து இருந்தார். மேலும் புதிய சிஇஒ பெண் என்று மட்டும் கூறி, அவர் யார் என்பது பற்றி எந்த தகவலும் வழங்கவில்லை. இதைத் தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ என்று கூறி ஏராளமான தகவல்கள் வெளியாகி...

வியாழன், 11 மே, 2023

நாட்டில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூன்று பிக்குகள் கைது

நாட்டில் விஹாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் சுமார் மூன்று வருடங்களாக பிக்கு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். சாமனேர தேரரின் தாயார் நமகே செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய மூவரும் இன்று பயாகலை பொலிஸில் சரணடைந்ததன் பின்னர்...

புதன், 10 மே, 2023

கப்புகொல்லாவ பொலிசாரின் பணிக்கு இடையூறு விளைவித்த மூவர் கைது

பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூன்று சந்தேக நபர்களை ஹொரோவ்பதான பொலிஸார் கைது செய்துள்ளனர். கபுகொல்லாவ பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட அலியாகட பிரதேசத்தில் முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற கப்புகொல்லாவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் இருவரை தாக்கி அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அலியாக்கட...
Blogger இயக்குவது.