ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

 நாட்டில்   இரண்டு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் மின் சிகரெட்டுகளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் என்பன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்த பயணி ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.
சந்தேக நபர் கொழும்பு – 13 பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
குறித்த நபர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 இல் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 
வந்துள்ளார்.  
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரது பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 120,400 சிகரெட்டுகள் அடங்கிய 602 அட்டைப்பெட்டி சிகரெட்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 14 செப்டம்பர், 2024

ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்திற்கு வாக்களியுங்கள் சிவி.விக்னேஷ்வரன் கோரிக்கை

தேர்தலுக்கு வாக்களிப்பதற்கு இன்னும் 6 நாட்களே உண்டு. அனைவரும் தவறாமல் சங்கு சின்னத்திற்கு 21ந் திகதியன்று காலை வாக்களிக்க வேண்டும் என சிவி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்  .அரியநேத்திரனின் ஆதரவுக் கூட்டம் நெல்லியடியில் இடம்பெற்றது. இதன்போது கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு 
கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ் மகளும் உங்களுக்கு வாக்குரித்து இருந்தால் நீங்கள் கட்டாயமாக இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்தத் தேர்தலுக்கும் மற்றைய தேர்தல்களுக்கும் என்ன 
வித்தியாசம் என்று கேட்பீர்கள்.    
வித்தியாசங்கள் இருக்கின்றன. முதலாவதாக நாங்கள் முதன் முறையாகத் 'தமிழ்ப்பேசும் மக்கள் நாம்' என்ற அடிப்படையில் இந்தத் தேர்தலில் கலந்து கொள்கின்றோம். இதுவரை 'இலங்கையர் நாம்' என்று 
கலந்து கொண்டோம்.  
அது எமக்கு எந்த நன்மைகளையுந் தரவில்லை. நாம் இதுவரை வாக்களித்த நபர்கள் நாம் வாக்களித்தோம் என்ற நன்றியறிதல் கூட இல்லாது பதவிக்கு வந்ததும் சிங்கள பௌத்த சிந்தனையில் மூழ்கிவிட்டார்கள். அரசியல் யாப்பில் இருப்பவற்றைக் கூடத் தர மறுத்தார்கள்.  
வட கிழக்கு தமிழ்ப்பேசும் மக்கள் வடகிழக்கில் பெரும்பான்மையினர் என்பதை மறந்து எம்மை வெறும் சிறுபான்மையினராகக் கருதி சிங்கள பௌத்த இனவாட்சியின் கனலை எம்மீது படர விட்டார்கள்.  
அதனால்த்தான் நாம் இம்முறை 'நாம் யார்' என்ற கேள்விக்கு விடை அளிக்கும் விதத்தில் 'நாம் தமிழர் - நமக்கு நாம்' என்ற 
சங்குக் குரலை
 எழுப்பியுள்ளோம்! 'சங்கே முழங்கு' என்று சகல தமிழரையும் சங்குக்கு வாக்களிக்குமாறு கோருகின்றோம். இரண்டாவதாக நாம் கட்சி சார்ந்து இந்தத் தேர்தலில் நிற்கவில்லை. கட்சிகள் கடந்து 
தேர்தலில் நிற்கின்றோம். 
 தமிழ்ப் பேசும் மக்களாக நாம் இந்தத் தேர்தலை எதிர்கொள்கின்றோம். கட்சிகள் வேற்றுமையை வலுப்படுத்துவன. சுயநலத்தை உறுதிப்படுத்துவன. ஆனால் இந்தத் தேர்தல் கட்சிகள் கடந்து தமிழ்ச் சமூகமாகச் சிந்தித்து
 ஒற்றுமையை மையமாக வைத்து நாம் நடத்தும் தேர்தல். ஆம்! நாம் தான் இந்தத் தேர்தலை நடத்துகின்றோம். அரசாங்கம் இந்த நாட்டின் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க ஜனாதிபதித் தேர்தலை நியமித்தது.
 நாம் அதனை மாற்றி தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தும் ஒரு தேர்தலாக இதனை மாற்றியுள்ளோம். தமிழ் மக்களின் அல்லல்களை அறிவிக்கும் ஒரு தேர்தலாக மாற்றியுள்ளோம். மூன்றாவதாக எமது
 ஒற்றுமையை உறுதிப்படுத்த இந்தத் தேர்தலைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணம் உண்டு. 
பாராளுமன்றத் தேர்தலானது தேர்தல் தொகுதிகளில் நடைபெறும். அங்கு உள்ளூர் மக்களே வாக்களிப்பார்கள்; தேர்ந்தெடுக்கவும் படுவார்கள். மாகாணசபைத் தேர்தலும் அவ்வாறே தான். உள்ளூர் மக்களே
 தேர்தலில் நின்று தமது உள்ளூர் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். உள்ளூராட்சி தேர்தல்களும் அவ்வாறே தான் நடைபெறுவன. ஆனால் ஜனாதிபதித் தேர்தல் மட்டுமே முழு நாட்டையும் மையப்படுத்தி 
நடைபெறுந் தேர்தல். 
இந்தத் தேர்தலில்த்தான் 'குற்றாலத்தில் இடி இடித்தால் கோயம்புத்தூர் விளக்கணையும்!' இங்கு நாம் தேர்தலில் வாக்களிக்கும் விதம் தெற்கு மக்களை கடுப்புக்குள் தள்ளிவிடும். இவ்வாறு நாம் செய்வது 
இதுவரை காலமும் தெற்கு எம்மை ஏமாற்றி வந்ததற்குப் பதிலடியாகும். எம்மைக் கிள்ளுக்கீரையாக இதுவரை பாவித்த தென்னவரை 
சிந்திக்க வைக்கும் தேர்தலாக இம்முறை மாற்றியுள்ளோம். நாடு நலம் பெற வேண்டுமென்றால் எம்மையும் சேர்த்துப் பயணிக்க வேண்டும் என்ற செய்தியை நாங்கள் இம்முறை வலுவாக வெளிப்படுத்தியுள்ளோம். கோதாபய சிங்களவரிடம் இருந்து மட்டும் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக முடியும் என்று காட்டினார். 
உயிர்த்த ஞாயிறு அவரின் சிந்தனைக்கு உரம் ஊட்டியது. இம்முறை 'நாமில்லாமல் நீங்களா?' என்ற கேள்வியை தென்னவர் முன் நாம் வைத்துள்ளோம். நான்காவதாக இந்தத் தேர்தலில் சுயநலம் களைந்து நாம் யாவரும் ஈடுபட்டுள்ளோம். எமது வேட்பாளர் 
தேர்தலில் தோற்பார். அது எமக்குத் தெரியும். அவருக்குந் தெரியும். அப்படியிருந்தும் தனது கட்சியுடன் பகைத்துக் கொண்டு அரியநேத்திரன் அவர்கள் எமது கட்டமைப்பின் அழைப்பை ஏற்று 
தேர்தலில் நிற்கின்றார். 
 தேர்தலில் தோற்பது மட்டுமல்ல வருங்காலத் தேர்தல்களில் அவர் ஈடுபட முடியாத சூழலில் கூட தனது சுயநலம் களைந்து தமிழ் மக்களின் அடையாளமாக அவர் பவனி வருகின்றார். நாம் கூட பொது நலம் கருதியே அவருக்காகப் பாடுபடுகின்றோம். அவருக்கு வாக்களித்தால் எமக்கு அமைச்சர் பதவி அல்லது அரச பதவி ஏதும் கிடைக்குமா? கிடைக்காது.
 தேர்தல் முடிந்ததும் அவர் யாரோ நாம் யாரோ? அப்படியிருந்தும் நாம் யாவரும் சேர்ந்து அவருக்காகப் பாடுபடுகின்றோம். 
 ஏன்? எமது வருங்காலத் தமிழ்ப்பேசும் சந்ததியினரை மனதில் வைத்து நாம் இந்த வேட்பாளருக்காக உழைக்கின்றோம். தமிழினத்திற்காக உழைக்கின்றோம். தமிழ் மொழிக்காக உழைக்கின்றோம். தமிழரின் தாயக பூமி பறிபோகின்றதே என்பதற்காக உழைக்கின்றோம். இந் நாட்டின் தமிழ் மக்கள் பறங்கியர்களின் கதிக்கு ஆளாகக்கூடாது என்பதற்காக
 உழைக்கின்றோம். 
ஆகவே தமிழ் மக்கள் ஆகிய நாம் யாவரும் சுயநலம் களைந்து தமிழர் தம் பொது நலம் கருதி இந்தத் தேர்தலில் கட்சி கடந்து கடமையாற்றுகின்றோம். தமிழரசுக் கட்சி அரியநேத்திரன் அவர்களுக்கு 
தமிழ் மக்கள் கூட்டணி மணிவண்ணன் அவர்கள் குரல் கொடுக்கின்றார். நுPசுடுகு திரு.சுரேஷ; பிரேமச்சந்திரன் அவர்கள் குரல் கொடுக்கின்றார். தமிழ்த் தேசியக் கட்சியின் திரு.ஸ்ரீகாந்தா அவர்கள் குரல் கொடுக்கின்றார். நாம் யாவரும் தமிழர் என்ற ரீதியில் எமது வருங்கால 
வம்சத்தவரை நினைத்து இன்று வேற்றுமை களைந்து ஒற்றுமையாகப் போராடுகின்றோம். 
ஐந்தாவதாக இவ்வாறு நாம் சேர்ந்து பயணிக்கும் போது எம்முள் இருக்கும் காட்டிக் கொடுக்கும் பகையாளிகளை நாம் அடையாளப்படுத்துகின்றோம். எட்டப்பர்களை அடையாளப்படுத்துகின்றோம். 
அவர்களைத் தவிர்த்து நாம் எம் பவனியைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். தமிழ் பொது
 வேட்பாளருக்கு வாக்களிக்கப்படாது என்று மேடையேறி முழங்குவேன் என்றவர் இன்னமும் அந்தக் கூட்டத்தைக் கூட்டவில்லை. அடுத்த பாhரளுமன்றத் தேர்தலில் தெற்கத்திய கட்சி ஒன்றில் இருந்து
 அவர் நியமனம் பெறுவதே அவருக்குச் சாலச் சிறந்தது. இன்னுமொருவர் தேர்தலைப் பகிஷ்கரிப்போம் என்றார். என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 13 செப்டம்பர், 2024

நாட்டில் திருகோணமலையில் அதிகரித்துவரும் சிங்களக் குடியேற்றங்கள்

நாட்டில் யுத்தத்தின் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் விரிவடைந்துவருகின்றது.
 வடக்கு, கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒன்றிணைந்த தாயகம் என்ற கோட்பாட்டை இல்லாமல் செய்யும் அதேவேளை, அவர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அவர்களது சரித்திரம் மற்றும் கலாசாரம் என்பவற்றை முற்றாக அழிப்பதே இந்த நில அபகரிப்பு
 முயற்சிகளின் பிரதான இலக்காகும் என த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட்டினால் வெளியிடப்பட்டுள்ள நில அபகரிப்பு தொடர்பான புதிய ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இயங்கிவரும் 'த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட்' என்ற கல்வியகத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்றுப்பணிப்பாளருமான அனுராதா மிட்டால் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இயங்கிவரும் 'த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட்' என்ற கல்வியகத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் 
இடம்பெற்றுவரும் நில அபகரிப்புக்கள் தொடர்பான தரவுகளையும், ஆவணப்படுத்தல்களையும் உள்ளடக்கிய 'ஆக்கிரமிப்பின் கீழ் திருகோணமலை: இலங்கையில் தமிழர் தாயகத்தை இலக்குவைக்கும் நில அபகரிப்பு' எனும் தலைப்பிலான 32 பக்க ஆய்வறிக்கையொன்று
 வெளியிடப்பட்டுள்ளது.
 இலங்கை சுதந்திரமடைந்த நாள் முதல் அபிவிருத்தி என்ற போர்வையில் இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டு குடியேற்றங்கள் நிறுவப்பட்டிருப்பதாகவும், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதிலிருந்து இக்குடியேற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும் அந்த
 ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை வலுவற்றவர்களாக்கும் பொருட்டு அரசாங்கங்கள் மற்றும் இராணுவத்தினரால் கையாளப்பட்டுவரும் பலதரப்பட்ட உத்திகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
 'யுத்தத்தின் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் விரிவடைந்துவருகின்றது. வடக்கு, கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒன்றிணைந்த தாயகம் என்ற 
கோட்பாட்டை இல்லாமல் செய்யும் அதேவேளை, அவர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அவர்களது சரித்திரம் மற்றும் கலாசாரம் என்பவற்றை முற்றாக அழிப்பதே இந்த நில அபகரிப்பு முயற்சிகளின் பிரதான இலக்காகும்' என த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட்டின் ஸ்தாபகரும் நிறைவேற்றுப்பணிப்பாளருமான அனுராதா மிட்டால் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
 இந்த ஆய்வறிக்கையின் பிரகாரம், நில அபகரிப்புக்களின் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் தற்போது 27 சதவீதமாக இருக்கும் சிங்கள மக்கள், அந்த மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 36 சதவீதத்தைத் தம்வசம் வைத்திருக்கின்றனர். அங்கு 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட
 நிலப்பரப்பு (41,164 ஏக்கர்) அபகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த 10 வருடங்களில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 
நீர்ப்பாசனத்திட்டங்கள், துறைமுக நவீனமயமாக்கல், சக்திவலு உற்பத்தி, சுற்றுலாத்துறை மேம்பாடு என்பன உள்ளடங்கலாக 'அபிவிருத்தி' எனும் போர்வையில், 'சிங்களமயமாக்கல்' நடவடிக்கையின் ஓரங்கமாக இந்த நில அபகரிப்புக்கள் இடம்பெற்றுவருகின்றன. அதேபோன்று 
தொல்லியல் திணைக்களம், வன இலாகா, மகாவலி
 அதிகாரசபை மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு அரச கட்டமைப்புக்கள் இந்த நில அபகரிப்பின் மூலம் இடம்பெறும் 'சிங்களமயமாக்கல்' நடவடிக்கையில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் 'ஆக்கிரமிப்பின் கீழ் திருகோணமலை' என்ற ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
 'தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகளை விஸ்தரிப்பதானது பௌத்தமயமாக்கலை 
மேற்கொள்வதற்கும், குடித்தொகைப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் தமிழ், முஸ்லிம் மக்களின் கலாசார சின்னங்களை அழிப்பதற்கும் வாய்ப்பேற்படுத்துகின்றது.
 2009 ஆம் ஆண்டிலிருந்து குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 3887 ஏக்கர் நிலப்பரப்பில் 26 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இலங்கை இராணுவத்தின் 7 பிராந்திய தலைமையகங்களில் ஐந்தை 
வட, கிழக்கு மாகாணங்களில் நிறுவியிருப்பதன் மூலம்
 இம்மாகாணங்கள் தொடர்ந்து உச்சளவில் இராணுவமயமாக்கப்பட்டுள்ளன. 
இது அப்பகுதிகளில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்கும், சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கும், நிலங்களை அபகரிப்பதற்கும் உதவுகின்றது' எனவும் த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட் தெரிவித்திருக்கிறது.
தமிழரின் கலாசாரத்தை அழிப்பதே பிரதான நோக்கம் அமெரிக்க ஆய்வறிக்கை
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 12 செப்டம்பர், 2024

இலங்கை இருவது வருடங்களில் அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் ஜனாதிபதி ரணில் உறுதி

இலங்கை  இன்னும் 20 வருடங்களில் அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் என்பதில் இளைஞர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க
 தெரிவித்துள்ளார். 
திருக்கோவிலில் 11-09-2024.அன்று  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு 
தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச அல்லது அனுரகுமார திஸாநாயக்க எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாது எனவும் அவர்கள் 
ஆட்சிக்கு வந்தால் தற்போதுள்ள பொருளாதாரமும் வீழ்ச்சியடையும் எனவும் 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் 
தெரிவித்துள்ளார். 
“புதிய தொழில் நுட்பத்தில் திருக்கோவில் விவசாயத்தை மேம்படுத்தி வருகிறோம். கடலைச் சாதகமாகப் பயன்படுத்தி மீன்பிடித் துறையை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
20 வருடங்களில் நல்ல நாட்டில் வாழ்வோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்க வேண்டும். 5 வயது குழந்தைக்கு 25 வயது ஆவதற்குள் நல்ல நாடு உருவாக வேண்டும். அதை பெற நாங்கள் உழைக்கிறோம்.
 அதனால்தான் வாக்களிக்க அழைக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 
குறிப்பிடத்தக்கது என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 11 செப்டம்பர், 2024

தமிழ் பொதுவேட்பாளருக்கு தமிழ் பேசும் மக்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்க வேண்டும்

தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பாராளுமன்றத்தில் மலையக மக்களுக்காக முன்னர் குரல் கொடுத்தவராவார்.
 அவர் மலையக மக்களை சகோதர சகோதரிகளாகவே நேசிக்கின்றார். மலையக
 மக்களும் கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களும்
 அவருக்கு ஆதரவாக ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிப்பதை அவர் மிகுந்த 
மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன்
 தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை ஒன்றிணைப்பதற்காக இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்கியிருப்பதாகக் கூறுகிறீர்கள். அவ்வாறெனில் தமிழ்பேசும் மலையகத் தமிழர்களும், கிழக்கு மாகாண
 முஸ்லிம் மக்களும் தமிழர்கள் இல்லையா? அவர்களை 
ஏன் உங்களது தமிழ் பொதுவேட்பாளருக்கு
 வாக்களிக்குமாறு 
கோரவில்லை? என எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கு 
அளித்திருக்கும் பதிலில் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கும் சி.வி.விக்கினேஸ்வரன், இதுபற்றி மேலும் 
கூறியிருப்பதாவது:
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பாராளுமன்றத்தில் மலையக மக்களுக்காக முன்னர் குரல் கொடுத்தவராவார். அவர் மலையக மக்களை சகோதர சகோதரிகளாகவே நேசிக்கின்றார். மலையக 
மக்கள் அவர் சார்பாக ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிப்பதை 
அவர் மிகுந்த
 மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார். தமிழர்கள் என்ற ரீதியில் மலையகத்தமிழர் ஒவ்வொருவரும் தமது மூன்று விருப்பு வாக்குகளில் ஒரு வாக்கை அவருக்கு அளிப்பதை அவர் கட்டாயமாக மனமுவந்து 
ஏற்றுக்கொள்வார்.
ஆனால் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சனைகள் வேறு, மலையக சகோதர சகோதரிகளின் பிரச்சனைகள் வேறாகும். எனினும் நாம் யாவரும் தமிழ் பேசும் மக்களாக ஒன்று சேரலாம். அதில் தவறில்லை. 
அது மட்டுமல்ல, 1977ஆம் ஆண்டளவில் மலையகத்திலே முடுக்கி விடப்பட்ட கலவரங்கள் காரணமாக அங்கிருந்து 
இடம்பெயர்ந்துவந்த 
பல மலையகத் தமிழர்கள் வன்னி மாவட்டத்தில் குடியேறியுள்ளார்கள். இப்போது அவர்கள் எமது மக்களாவர். வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பாரம்பரிய உரிமைகள் அவர்களையும் சாரும். ஆகவே தமிழ் பேசும் மக்கள் எங்கிருந்தாலும் எமது தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்க
 முன்வர வேண்டும்.
வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்களிடையே இன்று ஒரு மறுமலர்ச்சி பரிணமித்திருக்கின்றது. உலக அரங்குகளில் எமது குரல் ஓங்கி ஒலிக்க நாம் ஒரு பலமான மக்கள் கூட்டம் என்ற உண்மையை நிலைநிறுத்துவது அவசியம். இவ்வாறான ஒரு

 தமிழ் மொழி சார்ந்த ஈடுபாடு மலையகத்திலும், கிழக்கு முஸ்லிம்கள் மத்தியிலும் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே. நாம் யாவரும் தமிழ்த் தாயின் மக்களே என்ற உணர்வை இந்த ஈடுபாடும் நிலைப்பாடும் ஏற்படுத்துகின்றன.

அண்மையில் 30க்கும் மேற்பட்ட மலையக புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள், முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் போன்றோர் அரியநேத்திரனுடன் இணையவழியில் தொடர்புகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். தாம் யாவரும் ஒன்றுபட்ட தமிழினமாக தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதாகவும், மலையகத்தில் அவரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் அறிவித்தனர். அத்துடன் பொதுவேட்பாளரை மலையகத்திற்கு மக்கள் சந்திப்புக்காக அழைத்துள்ளனர். பொதுவேட்பாளரும் அவர்களது கூட்டத்தில் பங்கேற்க இணங்கியுள்ளார்.

நான் தொடக்கத்தில் இவ்வாறு கோராததற்குக் காரணம் கிழக்கிலங்கை முஸ்லிம் தலைவர்கள் பலர் வட, கிழக்கு இணைப்பை ஏற்க மறுக்கின்றார்கள். மற்றும் மலையகத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் நாம் எமது பாரம்பரிய உரிமைகளின் அடிப்படையில் எமது அரசியல் கோரிக்கைகளை முன்னிறுத்துவதை அவ்வளவாக வரவேற்கவில்லை.

பெரும்பான்மை வேட்பாளர்களுடன் சேர்ந்தே பயணிக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். ஆனால் இப்பொழுது எமது மலையக சகோதர சகோதரிகளும், கிழக்கிலங்கை முஸ்லிம் சகோதர 
சகோதரிகளும் நாம் யாவரும் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றுசேர விரும்புவது மிகுந்த மகிழ்ச்சியை ஊட்டுகின்றது. 
பொதுவேட்பாளர் கட்டாயமாக வட, கிழக்கு பிரமுகர்களை மலையக பிரச்சாரப்பணிகளுக்காக அனுப்பிவைப்பார் என்று நம்புகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 10 செப்டம்பர், 2024

இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளமாகஆயிரத்தி முன்னுறி ஐம்பது ரூபாவை வழங்க இணக்கம்

தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளமாக 1,350 ரூபாவும் மேலதிகமாக ஒரு கிலோ இலைக்கு 50 ரூபா கொடுப்பனவும் 
வழங்குவதற்கு 10-09-2024.இன்று  சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் 
எட்டப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ், தோட்ட முதலாளிகள் மற்றும் தோட்டத் தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
அதன்படி இன்று முதல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு 
தொழிலாளர் ஆணையாளர் நடவடிக்கை 
எடுக்கவுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தொழிலாளர் இராஜாங்க அமைச்சர்  வடிவேல் சுரேஷ், "தோட்டத் தொழிலாளி ஒரு நாள் வேலைக்குத் திரும்பினால் EPF மற்றும் ETF உடன் 1,552 ரூபாய் பெற வேண்டும் என்று நாங்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தோம்."
அதாவது EPF மற்றும் ETF இல்லாமல் 1,350 ரூபாய். ஆனால் அது 1,350 மற்றும் எஸ்டேட் தொழிலாளிக்கு அதிக சுமை கொடுக்க முடியாது. தோட்டத் தொழிலாளியின் உழைப்பை மட்டுப்படுத்த முடியாது.
 அதிகமாக உழைத்தால் அடிப்படைச் சம்பளத்தை 
விட அதிகமாக சம்பாதிக்க முடியும். 350 ரூபாயாக 
மட்டுப்படுத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார். 
குறிப்பிடத்தக்கது   என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

திங்கள், 9 செப்டம்பர், 2024

நாட்டில் சாரதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

நாட்டில் தேர்தல் வேட்பாளர்களை விளம்பரப்படுத்தும் ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டக்கூடாது என வாகன சாரதிகளுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்கள், பல்வேறு தேர்தல் வேட்பாளர்களின் படங்கள் மற்றும் 
சின்னங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களைக் காட்டுவது குறித்து 
ஆணைக்குழுவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக
 தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இது ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகும் என்று குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம், மோட்டார் வாகனங்களில் உள்ள அனைத்து அடையாளங்கள் மற்றும் ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.
 இந்த ஸ்டிக்கர்களை அகற்றுவதற்கு நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.குறிப்பிடத்தக்கது   என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


Blogger இயக்குவது.