சனி, 14 செப்டம்பர், 2024

ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்திற்கு வாக்களியுங்கள் சிவி.விக்னேஷ்வரன் கோரிக்கை

தேர்தலுக்கு வாக்களிப்பதற்கு இன்னும் 6 நாட்களே உண்டு. அனைவரும் தவறாமல் சங்கு சின்னத்திற்கு 21ந் திகதியன்று காலை வாக்களிக்க வேண்டும் என சிவி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்  .அரியநேத்திரனின் ஆதரவுக் கூட்டம் நெல்லியடியில் இடம்பெற்றது. இதன்போது கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு 
கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ் மகளும் உங்களுக்கு வாக்குரித்து இருந்தால் நீங்கள் கட்டாயமாக இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்தத் தேர்தலுக்கும் மற்றைய தேர்தல்களுக்கும் என்ன 
வித்தியாசம் என்று கேட்பீர்கள்.    
வித்தியாசங்கள் இருக்கின்றன. முதலாவதாக நாங்கள் முதன் முறையாகத் 'தமிழ்ப்பேசும் மக்கள் நாம்' என்ற அடிப்படையில் இந்தத் தேர்தலில் கலந்து கொள்கின்றோம். இதுவரை 'இலங்கையர் நாம்' என்று 
கலந்து கொண்டோம்.  
அது எமக்கு எந்த நன்மைகளையுந் தரவில்லை. நாம் இதுவரை வாக்களித்த நபர்கள் நாம் வாக்களித்தோம் என்ற நன்றியறிதல் கூட இல்லாது பதவிக்கு வந்ததும் சிங்கள பௌத்த சிந்தனையில் மூழ்கிவிட்டார்கள். அரசியல் யாப்பில் இருப்பவற்றைக் கூடத் தர மறுத்தார்கள்.  
வட கிழக்கு தமிழ்ப்பேசும் மக்கள் வடகிழக்கில் பெரும்பான்மையினர் என்பதை மறந்து எம்மை வெறும் சிறுபான்மையினராகக் கருதி சிங்கள பௌத்த இனவாட்சியின் கனலை எம்மீது படர விட்டார்கள்.  
அதனால்த்தான் நாம் இம்முறை 'நாம் யார்' என்ற கேள்விக்கு விடை அளிக்கும் விதத்தில் 'நாம் தமிழர் - நமக்கு நாம்' என்ற 
சங்குக் குரலை
 எழுப்பியுள்ளோம்! 'சங்கே முழங்கு' என்று சகல தமிழரையும் சங்குக்கு வாக்களிக்குமாறு கோருகின்றோம். இரண்டாவதாக நாம் கட்சி சார்ந்து இந்தத் தேர்தலில் நிற்கவில்லை. கட்சிகள் கடந்து 
தேர்தலில் நிற்கின்றோம். 
 தமிழ்ப் பேசும் மக்களாக நாம் இந்தத் தேர்தலை எதிர்கொள்கின்றோம். கட்சிகள் வேற்றுமையை வலுப்படுத்துவன. சுயநலத்தை உறுதிப்படுத்துவன. ஆனால் இந்தத் தேர்தல் கட்சிகள் கடந்து தமிழ்ச் சமூகமாகச் சிந்தித்து
 ஒற்றுமையை மையமாக வைத்து நாம் நடத்தும் தேர்தல். ஆம்! நாம் தான் இந்தத் தேர்தலை நடத்துகின்றோம். அரசாங்கம் இந்த நாட்டின் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க ஜனாதிபதித் தேர்தலை நியமித்தது.
 நாம் அதனை மாற்றி தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தும் ஒரு தேர்தலாக இதனை மாற்றியுள்ளோம். தமிழ் மக்களின் அல்லல்களை அறிவிக்கும் ஒரு தேர்தலாக மாற்றியுள்ளோம். மூன்றாவதாக எமது
 ஒற்றுமையை உறுதிப்படுத்த இந்தத் தேர்தலைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணம் உண்டு. 
பாராளுமன்றத் தேர்தலானது தேர்தல் தொகுதிகளில் நடைபெறும். அங்கு உள்ளூர் மக்களே வாக்களிப்பார்கள்; தேர்ந்தெடுக்கவும் படுவார்கள். மாகாணசபைத் தேர்தலும் அவ்வாறே தான். உள்ளூர் மக்களே
 தேர்தலில் நின்று தமது உள்ளூர் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். உள்ளூராட்சி தேர்தல்களும் அவ்வாறே தான் நடைபெறுவன. ஆனால் ஜனாதிபதித் தேர்தல் மட்டுமே முழு நாட்டையும் மையப்படுத்தி 
நடைபெறுந் தேர்தல். 
இந்தத் தேர்தலில்த்தான் 'குற்றாலத்தில் இடி இடித்தால் கோயம்புத்தூர் விளக்கணையும்!' இங்கு நாம் தேர்தலில் வாக்களிக்கும் விதம் தெற்கு மக்களை கடுப்புக்குள் தள்ளிவிடும். இவ்வாறு நாம் செய்வது 
இதுவரை காலமும் தெற்கு எம்மை ஏமாற்றி வந்ததற்குப் பதிலடியாகும். எம்மைக் கிள்ளுக்கீரையாக இதுவரை பாவித்த தென்னவரை 
சிந்திக்க வைக்கும் தேர்தலாக இம்முறை மாற்றியுள்ளோம். நாடு நலம் பெற வேண்டுமென்றால் எம்மையும் சேர்த்துப் பயணிக்க வேண்டும் என்ற செய்தியை நாங்கள் இம்முறை வலுவாக வெளிப்படுத்தியுள்ளோம். கோதாபய சிங்களவரிடம் இருந்து மட்டும் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக முடியும் என்று காட்டினார். 
உயிர்த்த ஞாயிறு அவரின் சிந்தனைக்கு உரம் ஊட்டியது. இம்முறை 'நாமில்லாமல் நீங்களா?' என்ற கேள்வியை தென்னவர் முன் நாம் வைத்துள்ளோம். நான்காவதாக இந்தத் தேர்தலில் சுயநலம் களைந்து நாம் யாவரும் ஈடுபட்டுள்ளோம். எமது வேட்பாளர் 
தேர்தலில் தோற்பார். அது எமக்குத் தெரியும். அவருக்குந் தெரியும். அப்படியிருந்தும் தனது கட்சியுடன் பகைத்துக் கொண்டு அரியநேத்திரன் அவர்கள் எமது கட்டமைப்பின் அழைப்பை ஏற்று 
தேர்தலில் நிற்கின்றார். 
 தேர்தலில் தோற்பது மட்டுமல்ல வருங்காலத் தேர்தல்களில் அவர் ஈடுபட முடியாத சூழலில் கூட தனது சுயநலம் களைந்து தமிழ் மக்களின் அடையாளமாக அவர் பவனி வருகின்றார். நாம் கூட பொது நலம் கருதியே அவருக்காகப் பாடுபடுகின்றோம். அவருக்கு வாக்களித்தால் எமக்கு அமைச்சர் பதவி அல்லது அரச பதவி ஏதும் கிடைக்குமா? கிடைக்காது.
 தேர்தல் முடிந்ததும் அவர் யாரோ நாம் யாரோ? அப்படியிருந்தும் நாம் யாவரும் சேர்ந்து அவருக்காகப் பாடுபடுகின்றோம். 
 ஏன்? எமது வருங்காலத் தமிழ்ப்பேசும் சந்ததியினரை மனதில் வைத்து நாம் இந்த வேட்பாளருக்காக உழைக்கின்றோம். தமிழினத்திற்காக உழைக்கின்றோம். தமிழ் மொழிக்காக உழைக்கின்றோம். தமிழரின் தாயக பூமி பறிபோகின்றதே என்பதற்காக உழைக்கின்றோம். இந் நாட்டின் தமிழ் மக்கள் பறங்கியர்களின் கதிக்கு ஆளாகக்கூடாது என்பதற்காக
 உழைக்கின்றோம். 
ஆகவே தமிழ் மக்கள் ஆகிய நாம் யாவரும் சுயநலம் களைந்து தமிழர் தம் பொது நலம் கருதி இந்தத் தேர்தலில் கட்சி கடந்து கடமையாற்றுகின்றோம். தமிழரசுக் கட்சி அரியநேத்திரன் அவர்களுக்கு 
தமிழ் மக்கள் கூட்டணி மணிவண்ணன் அவர்கள் குரல் கொடுக்கின்றார். நுPசுடுகு திரு.சுரேஷ; பிரேமச்சந்திரன் அவர்கள் குரல் கொடுக்கின்றார். தமிழ்த் தேசியக் கட்சியின் திரு.ஸ்ரீகாந்தா அவர்கள் குரல் கொடுக்கின்றார். நாம் யாவரும் தமிழர் என்ற ரீதியில் எமது வருங்கால 
வம்சத்தவரை நினைத்து இன்று வேற்றுமை களைந்து ஒற்றுமையாகப் போராடுகின்றோம். 
ஐந்தாவதாக இவ்வாறு நாம் சேர்ந்து பயணிக்கும் போது எம்முள் இருக்கும் காட்டிக் கொடுக்கும் பகையாளிகளை நாம் அடையாளப்படுத்துகின்றோம். எட்டப்பர்களை அடையாளப்படுத்துகின்றோம். 
அவர்களைத் தவிர்த்து நாம் எம் பவனியைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். தமிழ் பொது
 வேட்பாளருக்கு வாக்களிக்கப்படாது என்று மேடையேறி முழங்குவேன் என்றவர் இன்னமும் அந்தக் கூட்டத்தைக் கூட்டவில்லை. அடுத்த பாhரளுமன்றத் தேர்தலில் தெற்கத்திய கட்சி ஒன்றில் இருந்து
 அவர் நியமனம் பெறுவதே அவருக்குச் சாலச் சிறந்தது. இன்னுமொருவர் தேர்தலைப் பகிஷ்கரிப்போம் என்றார். என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.