இலங்கை இன்னும் 20 வருடங்களில் அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் என்பதில் இளைஞர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க
தெரிவித்துள்ளார்.
திருக்கோவிலில் 11-09-2024.அன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச அல்லது அனுரகுமார திஸாநாயக்க எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாது எனவும் அவர்கள்
ஆட்சிக்கு வந்தால் தற்போதுள்ள பொருளாதாரமும் வீழ்ச்சியடையும் எனவும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும்
தெரிவித்துள்ளார்.
“புதிய தொழில் நுட்பத்தில் திருக்கோவில் விவசாயத்தை மேம்படுத்தி வருகிறோம். கடலைச் சாதகமாகப் பயன்படுத்தி மீன்பிடித் துறையை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
20 வருடங்களில் நல்ல நாட்டில் வாழ்வோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்க வேண்டும். 5 வயது குழந்தைக்கு 25 வயது ஆவதற்குள் நல்ல நாடு உருவாக வேண்டும். அதை பெற நாங்கள் உழைக்கிறோம்.
அதனால்தான் வாக்களிக்க அழைக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பிடத்தக்கது என்பதாகும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக