திங்கள், 29 ஜூலை, 2024

நாட்டில் வாகன இறக்குமதிக்கான அனுமதியை வழங்க நடவடிக்கை

நாட்டில் வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.  
இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “இந்தத் தேர்தலைக் கேட்டு இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலைக்கு
 ஒரு அரசாங்கம் நாட்டை மீண்டும் இட்டுச் செல்ல முடியாது. 
அப்போது வாகனங்களைத் தவிர மற்ற அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. வாகனக் கட்டுப்பாடு தளர்த்துவது
 தொடர்பாக ஆகஸ்ட் வரையிலான அரசின் நிலைப்பாடு
 எப்படி இருக்கிறது. 
வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக நீக்கப்படும், முதல் காலாண்டில் வணிக நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களுக்கு அனுமதி வழங்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


ஞாயிறு, 28 ஜூலை, 2024

நாட்டில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஸ்டியை வலியுறுத்துபவர்களுக்கு ஆதரவு சிறீதரன்

நாட்டில் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது சமஸ்டியை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞானத்தில் வலியுறுத்தினால் அவர்களுக்கு
 ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழரசுக்கட்சி
 பரிசீலனை செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 
கிளிநொச்சியில் இன்று (28.07.2024) இடம்பெற்ற  நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எனினும் எதிர்வரும் மாதம் 10 ,11திகதிகளில் மத்திய குழு கூடிய பொது வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது தேர்தல் விஞ்ஞானத்தில் சமஸ்டியை வலியுறுத்தும் வேட்பாளரை ஆதரிப்பதா என்று முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 
விக்கினேஸ்வரன் வடமாகாண சபையே நடாத்த முடியாதவர் என்று சுமந்திரன் நேற்றைய தினம் குறிப்பிட்டது தொடர்பாக ஊடக வியலாளர் கேள்வி கேட்ட போது எமது கட்சியைச்சேர்ந்தவரின் கருத்திற்கு
 வியாக்கினம் வழங்குது சரியான விடயம் அல்ல 
விக்கினேஸ்வரன் தான் வழங்க வேண்டும் என்றும் அவர் 
வலியுறுத்தியுள்ளார். 
இப்போதைய கால சூழல் அனைவரையும் ஒன்றிணைத்து செல்ல வேண்டும் ஒற்றுமையை குழப்பி அதனை விட்டு பேசிக்கொண்டு இருந்தால் அடிப்படை அரசியல் கொண்டு செல்வதில் பிரச்சனை உள்ளது.
மகிந்த ராஜபக்ஷ  பிள்ளையானை நம்பி பொலிஸ் அதிகாரம் கொடுக்கலாமா என்று கேட்டிருந்தார்.அதற்காகவே முன்னாள் நீதியரசரை களம் இறக்கி பொலிஸ் அதிகாரம் நிதி அதிகாரம் வழங்குமாறு 
கோரியிருந்தோம் எல்லாருடைய விருப்பத்திலே
 தெரிவு இடம்பெற்றது” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 27 ஜூலை, 2024

ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்துள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேலும் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று முதல் அடுத்த 6 மாதங்களுக்கு இந்த தடை நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.என்பது குறிப்பிடத்தக்கது 





 

வெள்ளி, 26 ஜூலை, 2024

நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம்

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு 
அறிவித்துள்ளது.
அதேபோல், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ராஜகிரிய, சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டிய இடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வியாழன், 25 ஜூலை, 2024

நாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.  
குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது.  
சர்வதேச விசாரணையை தேவை, இழப்பீடுகள் வேண்டாம் எமக்கு பிள்ளைகள் வேண்டும் போன்ற போன்ற கோசங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது 



புதன், 24 ஜூலை, 2024

நாட்டில் உத்தேச சமரிசி சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய தேரர்கள்

நாட்டில் உத்தேச சமரிசி சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை திரியணிகைக மகாநாயக்க தேரர்கள் அனுப்பி 
வைத்துள்ளனர்.
 உத்தேச சமரிசி சட்டமூலம் சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் ஒழுக்கக்கேடானது என்று அதில் கூறப்பட்டுள்ளது.  
குறுகிய எதேச்சதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட அரசின் நிர்வாகத்தில் ஏதாவது கேலி செய்யப்பட்டால், அது மாநில 
அராஜகத்திற்கும் சமூகச் சிதைவுக்கும் வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 அதற்கிணங்க, நடைமுறைப்படுத்த முடியாத, நெறிமுறையற்ற இந்த சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி உடனடி கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 23 ஜூலை, 2024

பாராளுமன்றத்தில் கறுப்பு ஜூலைக் கலவரத்தை நினைவு கூர்ந்த சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கறுப்பு ஜூலைக் கலவரத்தின் 41 ஆவது ஆண்டு நிறைவை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னிமாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் 
நினைவு கூர்ந்தார்.
 பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற குடியியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றும்போதே கறுப்பு ஜூலைக் கலவரத்தை நினைவு கூர்ந்த அவர் மேலும் பேசுகையில், இன்று (23) ஜூலைக் கலவரத்தின் 41 ஆவது 
ஆண்டு தினம் .
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி இலங்கையின் சகல பகுதிகளிலும் தமிழர்கள் மீது தொடர்ந்து 3 தினங்கள் காட்டேறித்தனமான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன . அவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் 41 வருடங்கள் ஆகிவிட்டன. 
ஆனால் இன்னும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தற்போது தமிழர்களுக்கு இருந்த நிலங்களும் ,கலாசார அடையாளங்களும் பறிபோய்க்கொண்டிருக்கின்றன என்பதனை இந்த சபையில் கவலையுடன் பதிவு செய்கின்றேன் என்றார்.என்பது குறிப்பிடத்தக்கது 


Blogger இயக்குவது.